முஸ்லீமாக மாறுங்கள் .. சுதர்சனனுக்கு முஸ்லீம் சட்ட வாரியம் அறிவுரை
பெங்களூர்:
இஸ்லாம் மதத்தைத் தழுவும்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவரை இந்தியமுஸ்லிம் சட்ட வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்திய முஸ்லிம் சட்ட வாரியக் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இக் கூட்டத்தில்கலந்து கொண்டவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் கே. சுதர்சன் தெரிவித்தகருத்துக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இந்துக்களின் அடிப்படைத் தத்துவத்தை கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்றனர்.அவர்களைப் போலவே முஸ்லிம்களும் இந்து அடிப்படைத் தத்துவத்தைப்பின்பற்றுங்கள் என்று சுதர்சன் கூறியிருந்தார்.
சுதர்சனின் இக் கூற்றுக்கு இந்திய அளவில் முஸ்லிம்களிடையே பெரும் சலசலப்பைஏற்படுத்தியுள்ளது. இந்த சலசலப்பு பெங்களூர் முஸ்லிம் சட்ட வாரியக் கூட்டத்திலும்ஏற்பட்டது.
சுதர்சன் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பாக, அவரையே இஸ்லாம் மதத்தைத் தழுவும்படிமுஸ்லிம் சட்டம் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
சுதர்சன் கூறிய கருத்துக்களால் நாங்கள் கோபப்படவில்லை. ஹிந்துத்துவாகொள்கையைக் கடைப்பிடித்து ராமரையும், கிருஷ்ணரையும் வணங்கும்படி அவர்கூறியுள்ளார்.
நாங்கள் ராமரையும், கிருஷ்ணரையும் மதிக்கிறோம். ஆனால், வணங்கமாட்டோம்என்று முஸ்லிம் சட்ட வாரியத்தின் தலைவர் மெளலானா காஸி முஜாஹிதுல் இஸ்லாம்காஸ்மி தெரிவித்தார்.
சுதர்சனோ அல்லது வேறு யாரோ அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நாங்கள்வெறுக்கமாட்டோம். நாங்கள் சொல்வதெல்லாம் நூற்றுக்கணக்கான கடவுள்களைவணங்குவதை விட ஒரே கடவுளை வணங்குங்கள் என்பதுதான். அதற்கு இஸ்லாம்மதத்துக்கு வாருங்கள் என்றுதான் நாங்கள் அழைக்கிறோம் என்றார் காஸ்மி.
யாரும் பிறப்பை வைத்து மதிக்கப்படவதில்லை. மேலும் பிறப்பால் யாரும்உயர்த்தியில்லை, தாழ்த்தியில்லை. கடவுளின் தூதரான முகம்மது நபி,அரேபியர்களுக்கு மட்டுமல்ல செய்தியைச் சொல்லிவிட்டுச் செல்லவில்லை.
இந்த உலகத்துக்கே அவர் செய்தி சொல்லயிருக்கிறார். உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ,ஏழையோ, பணக்காரரோ அவர்கள் யாராக இருந்தாலும், சரிசமமாகமதிக்கப்படவேண்டும் என்பதுதான் முகம்மது நபிகளின் செய்தி. நாடு ஒன்று. அந்தநாட்டை நாம் வணங்கவேண்டும் என்றார் காஸ்மி.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications