மதுரையில் ஜெ.வுக்கு சிறப்பான வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக சென்னையிலிருந்து, மதுரைக்கு வந்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்குஞாயிற்றுக்கிழமை மாலை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கட்சியின் அவைத்தலைவர் காளிமுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திண்டுக்கல் சீனிவாசன், டிடிவி. தினகரன் மலைச்சாமி, சட்டப்பேரவை உறுப்பினர்தாமரைக்கனி உள்பட பலர், ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு பொன்னாடை மற்றும் மலர்ச்செண்டு அளித்து வரவேற்றனர்.

கட்சியின் அவைத்தலைவர் காளிமுத்து பொன்னாடையுடன், புத்தகமும் வழங்கினார். மதுரை அசோகா ஹோட்டலுக்குள் ஜெயலலிதா நுழைந்தபோது,சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சி நிர்வாகிகளும் அவரது காலில் விழுந்து வணங்க முயன்றனர். ஆனால் அங்கிருந்த கூட்டமிகுதியால் அவர்களால்விழுந்து ஆசி பெற முடியவில்லை. பலரின் கோரிக்கை மனுக்கள் கீழே விழுந்தன.

மகளிர் அணியினர் வரவேற்பு:

அதிமுக மகளிர் அணியினர் கட்சிக் கொடி அமைப்பிலான சேலையை சீருடையாக அணிந்து நின்று வரவேற்பு அளித்தனர். ஜெயலலிதாவின் வருகையையொட்டிமதுரை நகரில் பல இடங்களில் கட்சித் தோரணங்களும் வரவேற்புச் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.

தாரை தப்பட்டைகள் முழங்க கலைநிகழ்ச்சிகளுடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜெயலலிதா திங்கள்கிழமை காலை ராமநாதபுர மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்கிறார்.

நவம்பர் 6 ம் தேதி வரை அவர் கோவில்பட்டி, தாயமங்கலம், திண்டுக்கல், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ஆண்டிப்பட்டியில் கட்சிப் பிரமுகர்களின் இல்லவிழாக்களில் அவர் கலந்து கொள்வார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+