ஜெ.வின் மோடி மஸ்தான் வேலை.. பாய்கிறார் திரு.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதா அ.தி.மு.க பொதுக்குழுவில் பேசியிருப்பது மோடிமஸ்தான் வேலையைப் போன்று இருக்கிறது என்று திருநாவுக்கரசு கூறினார்.

இது தொடர்பாக எம்.ஜி.ஆர் அ.தி.மு.க பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய முதல்வர் டாக்டர் கலைஞரைப்பற்றி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ள பேச்சுக்கள் பெரும் தரக்குறைவாகவும், தகுதி குறைவாகவும் யாரும் ஏற்க இயலாதவிதத்திலும் கண்டனத்திற்குரியதாகவும் அமைந்துள்ளது.

பொதுக்குழு என்னும் பெயரில் ஒரு திருமண மண்டபத்தில் பொதுக்கூட்டத்தை நடத்தியுள்ளார். இக்கூட்டத்தில் கலந்து கொண்டோரை திருப்திப்படுத்தவும்,நம்பிக்கையூட்டவும், வழக்கம் போல் ஒரு சிலரை விட்டு பேச வைத்து மோடிமஸ்தான் வேலையைக் காட்டியுள்ளார்.

அம்மாவின் இன்னொறு ஆதரவாளரின் பேச்சு, தேர்தலில் தேர்தல் அதிகாரி அம்மா வேட்பு மனுவை நிராகரித்தால் அவர் கையை முறிப்போம்.ஜெயலலிதா அனுமதியுடன் அவர் முன்னிலையில் பேசப்பட்டுள்ள பேச்சு, இப்படி தரமற்ற நகைச்சுவை பேச்சுக்கள், சட்டத்திற்கு புறம்பான பேச்சு,நடைமுறை சாத்தியமற்ற பேச்சு, உண்மைக்கு மாறான பேச்சு, உள்நோக்கமுடைய, வந்தவர்களை திசை திருப்பும் - குழப்பும் பேச்சு இப்படி அவரவர்தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ப சிலர் பேசியுள்ளனர்.

ஜெயலலிதா தன் பங்குக்கு எம்.ஜி.ஆர் ஆட்சி அமைப்பேன் என்றுள்ளார். தேர்தல் நெருங்கினால் ஜெயலலிதாவுக்கு அடிக்கடி எம்.ஜி.ஆர் ஞாபகம் வரும்.தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பாண்டிச்சேரியிலும் அ.தி.மு.க ஆட்சியாம். காங்கிரஸ் கட்சியோடு ஒரு பக்கம் பேச்சுவார்த்தை, மறுபக்கம் காங்கிரஸ் ஆட்சிநடக்கும், மறுபக்கம் பாண்டிச்சேரியிலும் அ.தி.மு.க ஆட்சி என்று பிரகடனம். என்னே அம்மாவின் ராஜதந்திரம். சாதாரண தொண்டருக்கும்ஜெயலலிதாவின் திராவிட இயக்க பற்று புல்லரிக்க வைத்திருக்கும்.

வீட்டிற்கு அழைத்து மூப்பனார் உள்பட விருந்து படைக்கப்பட்ட கூட்டணி ஆட்சி பற்றி பேசும் த.மா.கா உள்ளிட்ட தோழமை கட்சித் தலைவர்கள்,தொண்டர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் இத்தனியாட்சி பேச்சால் மகிழ்ச்சியின் உச்சியில் நின்று ஆனந்தக் கூத்தாடுவர். ஜெயலலிதாவின் மறு பெயர்ராஜதந்திரம் அன்றோ என்று திருநாவுக்கரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+