டெல்லியில் 15 கிலோ வெடி மருந்துடன் 8 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கைது
டெல்லி:
வெடி மருந்துகள் மற்றும் போதைப் பொருட்களுடன் பாகிஸ்தானைச் சேர்ந்த 8தீவிரவாதிகள் டெல்லியில் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் பல இடங்களில் குண்டு வைத்து சட்டம்-ஒழுங்கைக் குலைக்கதீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.இதையடுத்து டெல்லி போலீஸார் மாநகரம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும்சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பாகிஸ்தானைச் சேர்ந்த 8 தீவிரவாதிகள் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து15 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து, 50 கிலோ ஹெராயின் போதைப் பொருள்ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ரூ. 50கோடியாகும். டெல்லியில் இவ்வளவு அதிக மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல்முறை என்று டெல்லி போலீஸ்கமிஷனர் அஜய் ராஜ் சர்மா தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications