தமிழ்த் தீவிரவாதிகளுடன் நெடுமாறன் ஆலோசனை
சென்னை:
அரசுத் தூதர்கள் கோபால் மற்றும் பழ.நெடுமாறன் ஆகியோர் சனிக்கிழமை திருச்சி சிறைக்குச் சென்று அங்கு அடைக்கப்பட்டுள்ள 4 தமிழ்த்தீவிரவாதிகளைளச் சந்தித்துப் பேசினர்.
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு 3 மாதங்கள் ஆகிவிட்டன. வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்ட நான்கு பேரில் இரண்டு பேர் மீண்டு வந்து விட்டனர். நடிகர்ராஜ்குமாரும், நாகேஷூம் மட்டுமே தற்போது வீரப்பன் பிடியில் உள்ளனர்.
வீரப்பன் விடுவிக்கக் கோரிய தடா கைதிகள் குறித்தான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதனால் ராஜ்குமார் விடுவிப்பில் இழுபறிநிலை நீடிக்கிறது.
இந்நிலையில் நடிகர் ராஜ்குமாரை மீட்கும் முயற்சியில் ஆறாவது முறையாகத் தூதுக்குழு திங்கள்கிழமை இரவு காட்டுக்குச் செல்லும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. அரசு வட்டாரங்களும் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளன.
வீரப்பன், தூதுக்குழுவினரை காட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து அவர்கள் காட்டுக்குச் செல்கின்றனர். மேலும், வீரப்பன்விடுவிக்கக் கோரிய தடா கைதிகள் குறித்தான வழக்கை இம்மாதம் 31 ம் தேதிக்குப்பின் சுப்ரீம்கோர்ட் விசாரிக்கவுள்ளது.
இந்நிலையில் நக்கீரன் கோபாலும், பழ.நெடுமாறனும் நேற்று முன்தினம் ரகசியமாகத் திருச்சி சிறைக்குச் சென்று அங்கு அடைக்கப்பட்டுள்ளநக்சலைட்டுக்களிடம் பேசினர். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்த விவரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் தூதுக்குழுவினர், நக்சலைட்டுக்களுக்கு உறுதிமொழி அளித்ததுடன், அவர்களிடமிருந்து காட்டிலுள்ள வீரப்பனுக்கும், நக்சலைட் தலைவர்மாறனுக்கும் அவர்கள் தகவல்கள் பெற்றுச் செல்வதாகக் கூறப்படுகிறது.
கோவிலில் பிரார்த்தனை:
இதற்கிடையே நடிகர் ராஜ்குமாரின் குடும்பத்தினர், ராஜ்குமார் நல்லமுறையில் விரைவில் திரும்பி வர வேண்டும் என்பதற்காக திருநள்ளாறு சனீஸ்வரர்கோவில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
கிருஷ்ணகிரி தமிழ்நாடு ஹோட்டலில் அவர்கள் காலை உணவு சாப்பிட்டுவிட்டு நிருபர்களைச் சந்தித்தனர். அப்போது நடிகர் ராஜ்குமாரின் இளைய மகன் புனித்ராஜ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
எங்கள் தந்தை கடத்தப்பட்டு 91 நாட்களாகி விட்டன. அவர் விரைவில் திரும்ப வேண்டும் என்பதற்காக நாங்கள் இங்கே பூஜை நடத்தினோம். எங்கள்தந்தையை மீட்பதற்காக தமிழக முதல்வர் கருணாநிதியும், கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் எடுத்து வரும் நடவடிக்கைகள் எங்களுக்கு மிகவும் திருப்தியாகஉள்ளது.
தூதுக்குழுவினர் மீண்டும் காட்டுக்குச் செல்லவிருக்கிறார்கள் என்று எங்களுக்குப் போன் மூலம் தகவல் கிடைத்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications