ராஜ்குமார் மீட்பு: கருணாநிதி - கிருஷ்ணா ஆலோசனை
சென்னை:
ராஜ்குமார் மீட்பு விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர்கருணாநிதியுடன், கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாதொலைபேசியில் விவாதித்தார்.
90 நாட்களை கடந்து விட்ட நிலையில் காட்டில் பிணைக்கைதியாக இருக்கிறார் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார். அவரைமீட்பது தொடர்பாக சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனுடன்பேச்சுவார்த்தை நடத்த திங்கள் கிழமை தூதுக் குழுவினர் 6வதுதடவையாக காட்டுக்குச் செல்வார்கள் என்றுஎதிர்பார்க்கப்பட்டது.
அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தூதுக்குழுவினர் தயார்நிலையில் உள்ளனர். ஆனால், வீரப்பனிடம் இருந்து அழைப்புவரவில்லை. அவன் பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்துதகவல் அனுப்பிய பிறகு தான் இங்கிருந்து தூதுக்குழு புறப்படமுடியும்.
இந்த சிக்கலால் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை குறித்துதொலைபேசியில் தமிழக முதல்வர் கருணாநிதியுடன், கிருஷ்ணாதிங்கள் கிழமை ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications