"மூலிகை ராமர் பிள்ளைக்கு குற்றப் பத்திரிகை நகல்
சென்னை:
மூலிகைப் பெட்ரோல் என்று பொய் கூறி பொதுமக்களை ஏமாற்றிய ராமர் பிள்ளைக்கும் அவருக்குஉடந்தையாயிருந்த மேலும் 4 பேருக்கும் சி.பி.ஐ. திங்கள்கிழமை குற்றப்பத்திரிக்கை நகல்களை வழங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் ராமர் பிள்ளை. இவர் சில ஆண்டுகளுக்கு முன் மூலிகைகள் மூலம் பெட்ரோல்தயாரித்தார். அதன் மூலம் அனைத்து வாகனங்களையும் ஓட்ட முடியும் என்று கூறி பல பரிசோதனைகளையும்செய்து காட்டினார்.
சாதாரண பெட்ரோலை விட மூலிகைப் பெட்ரோல் விலை குறைவு என்பதால் இதை வாங்குவதற்குவாடிக்கையாளர்களிடம் பெரும் போட்டி ஏற்பட்டது. ஆனால் இவர் மூலிகை கொண்டு பெட்ரோல்தயாரிக்கவில்லை. ரசாயனப் பொருட்களைக் கொண்டுதான் பெட்ரோல் தயாரித்துள்ளார் என்று தெரிய வந்தது.
மேலும் இவரிடம் மொத்த விலையில் பெட்ரோல் வாங்கி விற்கும் விற்பனையாளர்களிடம் ரூ 2.27 கோடி வரைமோசடி செய்துள்ளார் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிபிஐ இவர் மேல் வழக்குத் தொடர்ந்தது.ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீனில் விடுதலையடைந்தார்.
தற்போது சிபிஐ, இவருக்கும், மூலிகைப் பெட்ரோல் தயாரிப்பதற்காக இவருக்கு உடந்தையாயிருந்த இவரதுவளர்ப்புத் தாய் வேணுதேவி, ஜவுளி ஏற்றுமதியாளர் சின்னசாமி, ஆட்டோமொபைல் நிறுவன உரிமையாளர்ராஜசேகர், யு.சி.ஓ.வங்கி முன்னாள் ஊழியர் பரத் ஆகியோருக்கும் திங்கள்கிழமை குற்றப்பத்திரிக்கைகளைவழங்கியது.
இந்த வழக்கு குறித்து மீண்டும் நவம்பர் 15 ம் தேதி விசாரிக்கப்படும் என்று 10 வது மெட்ரோபாலிட்டன்மாஜிஸ்ட்ரேட் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications