விஷம் குடித்த என்.டி.ராமாராவ் பேத்தி சாவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் பேத்தி, குடும்பப் பிரச்சனை காரணமாக விஷம் குடித்து சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மறைந்த நடிகரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் மூத்த மகன் ஜெய்கிருஷ்ணா. இவரது மகள் குமுதினி. வயது 29.

இவருக்கும், மறைந்த சினிமா தயாரிப்பாளர் எல்.வி.பிரசாத் மகன் ஸ்ரீநாத் பிரசாத்துக்கும் கடந்த 1993 ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப்பிறகு அவர்கள் அமெரிக்காவில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குமுதினி கணவனை விட்டு பிரிந்து சென்னைக்கு வந்தார். சென்னை திருவான்மியூரில்வால்மிகி நகரில் இவர் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 24 ம் தேதி குமுதினி வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில்கிடந்தார்.

உடனடியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப் பலனின்றி இறந்தார். குமுதினி இறந்த விவரம்குறித்து போலீசில் கொடுக்கப்பட்ட புகார் குறித்த விவரம்:

1993 ம் வருடம் என் மகளுக்கும், ஸ்ரீநாத் பிரசாத்துக்கும் திருமணம் நடந்தது. அவர்கள் அமெரிக்காவில் வசித்து வந்தனர். பிரசாத் துணிவியாபாரம்செய்து வந்தார். இதற்கிடையே பிரசாத்துக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த குமுதினி தன் குழந்தைகளுடன் சென்னைக்கு வந்தார். பின்னர் சில மாதங்களில் ஸ்ரீநாத் பிரசாத்தும் சென்னைக்குவந்தார். அவருக்கு மனஉளச்சலையும் ஏற்படுத்தினார்.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த குமுதினி தற்கொலை செய்து கொண்டு இறந்தார் என்று புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து ஸ்ரீநாத் பிரசாத் கைதுசெய்யப்பட்டு, உடனடியாக ஜாமீனில் விடுதலையடைந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+