தொடரும் கடல் பரிதாபம்.. பாண்டியில் 5 பேர் சாவு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி கடலில் குளித்த 5 மாணவர்கள் அலையில் சிக்கி கடலில் மூழ்கினர். சென்னையைத் தொடர்ந்து புதுவையிலும் இந்த சோகச் சம்பவம்நடந்துள்ளது.
சென்னையில் வெள்ளிக் கிழமை பள்ளி மாணவர்கள் 5 பேர் கடலில் விழுந்த பந்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது கடலில் மூழ்கி இறந்தனர்.அவர்களது உடல் மறுநாள் இரவு தான் கரை ஒதுங்கியது.
அதேபோல் ஒரு சோகச் சம்பவம் புதுவையில்
ஞாயிற்றுக் கிழமை நடந்துள்ளது. பாண்டிச்சேரி கடலில் காந்தி சிலை பின்பகுதியில் கடல் நீரில் குளித்துவிளையாடுவது வழக்கம்.
ஞாயிறன்று 5 மாணவர்கள் அதேபோல் கடலில் ஆழம் தெரியாமல் இறங்கி விட்டனர். அப்போது ராட்சச அலை ஒன்று உருவாகி அவர்களை இழுத்துச்சென்றது. கடலுக்குள் சென்று விட்ட அந்த மாணவர்களால் கரையேற முடியாமல் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
அந்த மாணவர்களின் பெயர் சூசைராஜ் (20), செல்வகுமார் (15), ரவி (18) மற்றவர்கள் யாரென்று தெரியவில்லை. இவர்களில் 4 பேர் உடல்கள் கரைஒதுங்கின.












Click it and Unblock the Notifications