தந்தையின் விடுதலைக்காக கோவில்களுக்குப் போகிறார் ராஜ்குமார் மகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தந்தை ராஜ்குமார் விடுதலை வேண்டி அவரது மகன் புனித் ராஜ்குமார் குடும்பத்துடன்தமிழகத்தின் பல்வேறு கோவில்களுக்குப் போகிறார்.

கன்னட நடிகர் ராஜ்குமார், சந்தன வீரப்பனால் கடத்தப்பட்டு காட்டில் கைதியாய் மூன்றுமாதமாக வைக்கப்பட்டுள்ளார். அவரை மீட்க தமிழகம், கர்நாடகம் படாதபாடு பட்டுவருகின்றன. 5 முறை தூதர்களை அனுப்பியும் வீரப்பன் பிடிவாதம் தளரவில்லை.

யாரை விட்டாலும் விடுவேன் ராஜ்குமாரை மட்டும் கோரிக்கை நிறைவேறும் வரைவிட மாட்டேன் என்று மிரட்டி வருகிறான் வீரப்பன். இந்த நிலையில், இதற்கிடையில்ராஜ்குமார் கடத்தப்பட்டு 90 நாட்கள் முடிந்து விட்டதை அடுத்து அவர் நலமுடன்மீட்கப்பட வேண்டும் என்று வேண்டி புனித்ராஜ்குமார் தனது குடும்த்துடன் ஞாயிற்றுக்கிழமை நாகை மாவட்டம் வந்தார்.

அங்குள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். பூஜையை முடித்துகோவிலிலேயே தங்கி விட்டார். பின்னர் திங்கள் கிழமை திருநள்ளார், திருவெண்காடு,பெரும்பள்ளம் ஆகிய கோயில்களுக்குச் சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.

31ம் தேதி செவ்வாய் கிழமை சூரியனார் கோவில், கஞ்சனூர், திருமணஞ்சேரி,திருபுவனம், திருநாகேஸ்வரம், கும்பகோணம், ஆலங்குடி, திங்களூர், திருவாரூர்மற்றும் தஞ்சாவூர் கோவில்களில் அவர் சிறப்பு வழிபாடு செய்கிறார்.

நாகை, தஞ்சை மாவட்டங்களில் உள்ள கோயில்களில் மூன்று நாள் வழிபாட்டைமுடித்துக் கொண்டு அவர் செவ்வாய் கிழமை இரவு பெங்களூர் திரும்புகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+