ஈரோடு to
ஈரோடு:
சாதி, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன்சுதாகரன் ஈரோட்டிலிருந்து பவானிக்கு பாதயாத்திரை மேற்கொண்டார்.
பாதயாத்திரையை முன்னிட்டு ஈரோட்டில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஜாதி, மத நல்லிணக்கம் பொதுமக்களிடையே ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்திஇந்த பாதையாத்திரையை மேற்கொண்டு வருகிறேன்.
ஏற்கனவே திருச்செந்தூர், பழனி, வேளாங்கண்ணி, ஆனைமலை ஆகியஇடங்களுக்குப் பாதயாத்திரை சென்றுள்ளேன்.
எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும்என்பதை வலியுறுத்தியே இந்த பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறேன்.
நமது நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, படிப்பறிவின்மை இன்னும்நீடித்து வருகிறது. இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவேண்டிய கட்டாயம் உள்ளது.
எம்.ஜி.ஆரின் தொண்டர்களை பலர் ஏமாற்றி வருகின்றனர். உண்மையான எம்.ஜி.ஆர்ஆட்சி அமைப்போம் எனக் கூறி வருகின்றனர்.
எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் அப்பாவிகள் அல்ல. இப்போதைய அரசியல்சூழ்நிலையை அவர்கள் நன்கு அறிவர். அவர்களை யாரும் எம்.ஜி.ஆரின் பெயரைக்கூறி ஏமாற்ற முடியாது என்றார் சுதாகரன்.












Click it and Unblock the Notifications