தலிபான் எதிர்ப்பு படைகளுக்கு உதவ ரஷ்யா முடிவு
மாஸ்கோ:
ஆப்கானிஸ்தானில் தலிபான் எதிர்ப்பு படைகளுக்கு உதவ ரஷ்யா முடிவுசெய்துள்ளது.
ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் இகோர் செர்ஜீவும், தலிபான் எதிர்ப்புப் படையின்தலைவர் அகமத் ஷா மசூத்தும் கடந்த வாரம் தாஜிகிஸ்தான் தலைநநகர் துஷான்பேயில்சந்தித்துப் பேசினர்.
இச் சந்திப்புக்குப் பிறகு ரஷ்யா இம் முடிவை எடுத்துள்ளது. முன்னதாக தனது ஆப்கன்பாலிசி மூலம் தூதரக ரீதியில் தலிபான் அரசுக்கு எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளரஷ்யா முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான் கைப்பற்றிக் கொள்வதைத் தடுக்கும்முயற்சியில் தலிபான் எதிர்ப்புப் படைகள் ஈடுபட்டுள்ளன. அப் படைகளுக்கு ராணுவமற்றும் நிதி உதவி அளிப்பது குறித்து கடந்த வாரம் நடந்த சந்திப்பில்ஆலோசிக்கப்பட்டது.
இருப்பினும், அது குறித்து இறுதி முடிவு எடுக்கவேண்டிய ரஷ்ய அதிபர்தான் என்றுமாஸ்கோ தினசரியின் பாதுகாப்பு ஆலோசகர் சோலோவ்யோவ் தெரிவித்தார்.
துஷான்பேயில் நடந்த சந்திப்பு ரகசியமானது என்றாலும், தலிபான் எதிர்ப்புப்படைகளுக்கு உதவ ரஷ்யா முடிவு செய்துள்ளதற்கு ஏற்ப சில நடவடிக்கைகள் நடந்துவருகின்றன.
அப்படி உதவ ரஷ்யா முன் வந்தால் அது தலிபான் எதிர்ப்புப் படைகளுக்கு மிகவும்பயனுள்ளதாக இருக்கும். ராணுவ உதவிகள் ஈரான் மூலம் தலிபான் எதிர்ப்புப்படைகளுக்கு வழங்கப்படும்.
ஏற்கெனவே இது குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சருடன் செர்கீவ் பேச்சுநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது என்றார் சோலோவ்யேவ்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications