இந்திய அணியில் முரளி கார்த்திக், ரமேஷ்

Subscribe to Oneindia Tamil

மும்பை:

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஒரே டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

அணியில் ஒரே புதுமுகமாக ஒரிசாவைச் சேர்ந்த ஷிவ் சுந்தர் தாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். அணியிலிருந்து பதானி, காம்ளி, தய்யா, ஸ்ரீராம் ஆகியோர்நீக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குப் பதிலாக முரளி கார்த்திக், ஸ்ரீநாத், ரமேஷ், வி. லக்ஷ்மண் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷுக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டி டாக்காவில் நவம்பர் 10-ம் தேதி தொடங்குகிறது. இப்போட்டிக்கான இந்திய அணி மும்பையில்திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

கென்யாவில் நடைபெற்ற ஐ.சி.சி. நாக் அவுட் போட்டிக்கான இந்திய அணியில் புதிதாகச் சேர்க்கப்பட்ட யுவராஜ் சிங், ஸாகிர் கான் ஆகியோர் தொடர்ந்துஅணியில் இடம் பெற்றுள்ளனர்.

காயமடைந்த அனில் கும்ளே, ராகுல் திராவிட் இருவரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் இருவரும்குணமடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காயம் காரணமாக நீண்ட நாட்களாக அணியில் இடம் பெறாமல் ஓய்வு பெற்று வந்த வேகப் பந்து வீச்சாளர் ஸ்ரீநாத் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார். ஹைதராபாத்துக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டி நவம்பர் 1-ம் தேதி தொடங்குகிறது.

அப்போட்டியில் அவர் தனது உடல் திறமையை நிரூபிக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர்பொறுப்புக்கு சபா கரீம் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணியில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள தாஸ், லக்ஷ்மண் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள். ரமேஷ் இடைநிலை ஆட்டக்காரராகவிளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கும்ளே காயமடைந்துள்ளதால் அவரது இடம் சுனில் ஜோஷிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார்.

அணி விவரம்:

சவுரவ் கங்குலி (கேப்டன்), ராகுல் திராவிட் (துணை கேப்டன்), சபா கரீம் (விக்கெட் கீப்பர்), சச்சின் டெண்டுல்கர், லக்ஷ்மண், ஷிவ் சுந்தர் தாஸ்,ரமேஷ், யுவராஜ் சிங், ஸ்ரீநாத், அகார்கர், சுனில் ஜோஷி, பிரசாத், ஸாகிர் கான், முரளி கார்த்திக்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+