கல்வீச்சுக்கிடையே தேவருக்கு அஞ்சலி செலுத்தினார் ஜெ.
பசும்பொன் (ராமநாதபுரம்):
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில், தேவர் நினைவிடத்தில் ஜெயலலிதா அஞ்சலிசெலுத்த வந்தபோது கூட்டத்தினரிடையே கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் போலீசாருக்கும்,அதிமுகவினரும் மோதிக் கொண்டனர்.
தேவர் குருபூஜையை ஒட்டி பசும்பொன் கிராமத்திலுள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்துவதற்காக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா திங்கள் கிழமை வந்தார். அவருடன்சசிகலா, தினகரன், காளிமுத்து ஆகியோரும் வந்தனர்.
ஜெயலலிதா வருகிறார் என்பதால் முன்கூட்டியே அதிமுகவினர் ஆயிரக்கணக்கில் அங்கேதிரண்டிருந்தனர். ஜெயலலிதா காரில் வந்திறங்கியதும் வாழ்க கோஷமிட்டவாறு அவரைபின்தொடர்ந்தது அதிமுக கூட்டம். ஆனால், நினைவிடத்திற்குள் ஜெயலலிதா, சசிகலா, தினகரன்,காளிமுத்து ஆகியோருக்கு மட்டும் போலீசார் அனுமதி அளித்தனர்.
மற்ற அதிமுகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் ஆத்திரமடைந்தனர்.போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் திணறினர். அப்போதுபோலீசார் மீது அதிமுகவினர் கல் வீசித் தாக்கினர். போலீசார் பதிலுக்கு தடியடி நடத்திஅதிமுகவினரை விரட்டியடித்தனர்.
இந்த பதட்டத்திற்கு மத்தியில் ஜெயலலிதா அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications