25 தமிழர்கள் படுகொலை .. கண்டிக்க வைகோ கோரிக்கை
சென்னை:
இலங்கை பண்டாரவிளை மறுவாழ்வு முகாமில் 29 விடுதலைப் புலிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மத்திய அரசு, இலங்கை அரசு மீது கண்டனம்தெரிவிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
ஐ.நா.சபையின் 55 வது கூட்டத்தொடரில் இந்திய நாட்டின் பிரதிநிதியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.
அப்போது நடந்த பல முக்கிய விவாதங்களில் அவர் கலந்து கொண்டு பேசினார். கூட்டம் முடிந்தபின் சென்னை திரும்பிய அவர் விமானநிலையத்தில் நிருபர்களிடம்கூறியதாவது:
ஐ.நா.சபைக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் படும் துயரங்கள் குறித்து உலக நாடுகள் தெரிந்து கொள்ளும் விதத்தில் உரையாற்றினேன். சமீபத்தில்இலங்கை பண்டாராவிளை மறுவாழ்வு முகாமில் இருந்த 29 விடுதலைப்புலிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கதாகும்.
இந்தப் படுகொலை குறித்து இலங்கை அரசுக்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications