சட்டீஸ்கர் மாநில முதல்வராகிறார் அஜீத் ஜோகி
Subscribe to Oneindia Tamil
ராய்ப்பூர்:
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அஜித் ஜோகி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டீஸ்கர் மாநிலத்தின் முதல் முதல்வராக செவ்வாய்க்கிழமைநள்ளிரவு பதவியேற்றுக் கொள்கிறார்.
சட்டீஸ்கர் மாநிலத்தின் புதிய கவர்னர் தினேஷ் நந்தன் சாஹே, முதல்வர் அஜித் ஜோகிக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைப்பார்.
பதவியேற்பு விழா ஸ்ப்ராவிலிங் போலீஸ் மைதானத்தில் நடக்கவுள்ளது. 90 உறுப்பினர்கள் கொண்ட சட்டீஸ்கர் மாநில சட்டப்பேரவையில் 48 காங்கிரஸ்எம்.எல்.ஏ.க்களால் அஜித் ஜோகி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications