97 வாரங்களுக்குப் பிறகு பணவீக்கம் 7 சதவீதம் அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

வீரப்பாயணத்தில் முதல் தூதர் அத்தியாயம் சோகமாக முடிய, இரண்டாம் தூதர் அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது. இது விரைவிலேயே முடியும் என்று -வழக்கம் போல - எதிர்பார்க்கப்படுகிறது. அங்ஙனமே ஆவதாக.

இதுவரை நடந்த கதையே, பல கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், புதிய தூதர் அத்தியாயம் கேள்விகளை மட்டுமல்லாமல், சந்தேகங்களையும்எழுப்புகிறது.

முதல் அத்தியாயக் கேள்விகள், இரண்டாம் அத்தியாய சந்தேகங்கள் ஆகியவற்றுக்குத் தெளிவான விடை கிடைக்க வேண்டுமென்றால் - கதாசிரியர்மாற வேண்டும்.

தமிழக முதல்வர் இந்தக் கதையை எழுதுகிற வரையில், இதன் முடிவு சுபமாக இருந்தாலும், கதை, புரியாத கதையாகத்தான் இருக்கும். வழக்கு,விசாரணை, நீதிமன்றப் பார்வை - என்று ஏதாவது வந்து, கதையை யாராவது நீதிபதி எழுதினால்தான் என்ன நடந்தது என்பது புரியும்.

அதுவரை கேள்விகளோடு திருப்தியடைய வேண்டியதுதான் ; சந்தேகங்களோடு நிறுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

வீரப்பர் எங்கிருக்கிறார்? என்பது முதல் கேள்வி. அடர்ந்த காட்டில்,

கல், முள் ; மேடு, பள்ளம் ; புதர், சகதி நிறைந்த பாதையில் , நாற்பது

கிலோ மீட்டர் தள்ளி அவர் இருப்பதாகவும், மிகவும் கஷ்டப்பட்டுதான் அந்த இடத்தை அடைய முடியும் என்றும் முதல் தூதர் அறிவித்திருந்தார். அதற்குப்பிறகு வீரப்பர் இடப்பெயற்சி பலமுறை நடந்ததாகவும் கூறப்பட்டது.

இடப்பெயற்சி என்றால், காட்டின் உள்ளேதான் வீரப்பர் பெயர்வாரே தவிர, வெளி திசையில் பெயர மாட்டார். அப்படியானால் அந்த, கடப்பதற்கேகடினமான நாற்பது கிலோ மீட்டர் இப்போது அறுபது கிலோ மீட்டராகக் கூட இருக்கலாம். சரி, சாதாரண மனிதர்களால் பயணம் செய்ய முடியாத தூரம்- அதை அனாயாசமாகக் கடந்து, திரும்பக் கடந்து, சற்றும் களைப்படையாமல், மீண்டும், மீண்டும் கடந்து, சாதனை புரிய முதல் தூதரால் முடியும் ; ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்.

அப்படி கடக்க முடியாத தூரத்தைக் கடக்க, வயது முதிர்ந்த ராஜ்குமாராலும் முடிகிறதே , அது எப்படி? அட, அதுதான் போகட்டும் - இரண்டாம்தூதரும், அவருடன் சென்ற துணை தூதர்களும் கூட, இந்தச் சாதனையை சர்வ சாதாரணமாக நடத்தியிருக்கிறார்களே, அது எப்படி? அது என்ன நாற்பது கிலோமீட்டரா, இல்லை. வெறும் மீட்டரா? தெரியவில்லை.

இந்த தூரத்தை அனாயாசமாக கடந்து தப்பி வந்த நாகப்பா ஏன் நீதிமன்றத்தின் ஆணையை ஏற்று, அங்கு ஆஜராக மறுத்து விட்டார்!

உண்மையைச் சொல்ல வேண்டியிருக்குமே என்ற பயமா? அவர் எதை மறைக்கிறார்? அல்லது மறைக்கும்படி உத்திரவிடப்பட்டிருக்கிறார்?

பத்திரிக்கையாளர்களிடமிருந்து கூட அவர் ஏன் ஒளிகிறார்? அல்லது ஒளிக்கப்படுகிறார்?

உளறிக் கொட்டக் கூடியவர் என்பதால், உண்மையை உளறி விடுவார் என்ற பயமா? யாருக்கு அந்த பயம்?

அடுத்த இன்ஸ்டால்மென்டாக வெளியே வந்த கோவிந்தராஜ், எனக்கு உடல் நலம் குன்றியதால் வீரப்பனாகவே என்னை அனுப்பி விட்டார் ; புதியதூதர்கள் முயற்சி எதுவும் செய்து, என் விடுதலையைப் பெறவில்லை என்று அடித்துச் சொல்லி விட்டார்.

புதிய தூதர்களும், முதல் தூதரும் சேர்ந்து, எங்கள் முயற்சியினால் கோவிந்தராஜ் விடுதலை பெற்றார் என்று சொல்கிறார்கள். இதில் எது உண்மை?கோவிந்தராஜ் பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

இரண்டாம் தூதுக் கோஷ்டியின் தலைமைப் பதவி, யாருக்கு என்பதில் ஏன் பல முரண்பட்ட நிலைகள்? முதல் தூதர், தன் தலைமை ஏற்கப்பட்டது என்றுவலியுறுத்த, இரண்டாம் தூதர், தலைமை தனது என்று காட்டுகிற வகையில், தனது இயக்கத்தின் மூலம் அறிக்கை விட, இந்த தலைமைப் போட்டி ஏன்வந்தது?

இரண்டாம் தூதர், அரசு தூதர்தான் என்றும், இல்லை என்றும், முதல்வர் மாறி மாறிப் பேச என்ன காரணம்? வீரப்பர்,யார் மூலமாக இரண்டாம்தூதரை அனுப்புமாறு கோரினார் என்று வெளியே சொல்ல தமிழக அரசு மறுப்பது ஏன்?

இரண்டாம் தூதர், கர்நாடக அரசின் தேர்வு அல்ல என்று சோனியா காந்தி சொல்ல, தமிழக முதல்வர் அதை மறுக்க, கர்நாடக முதல்வர் மழுப்ப,தூதர்,

நான் தூதரே அல்ல என்று கூற, இரண்டாம் தூதர் நியமனம் ஒரே கூத்தாக இருக்கிறதே - ஏன் இந்த முரண்பாடுகள்?

கர்நாடக முதல்வரை இரண்டாம் தூதர் சந்திப்பார் என்று வந்த செய்தி. வெறும் பேச்சாக முடிந்தது ஏன்? கர்நாடக முதல்வருக்கு ஏற்பட்ட இந்த சந்திப்புத்தயக்கம், தமிழக முதல்வருக்கு ஏற்படாமல் போனது ஏன்?

முதல் தூதரும் சரி, இரண்டாவது தூதரும் சரி, வீரப்ப ஆதரவாளர்களாக இருக்கிற போது, அவர்கள் வீரப்பனுடன் என்ன பேசினார்கள் என்பதை அறிந்துகொள்ள எங்களால் முடியாது? என்று தப்பியவர் சொல்ல, பேசப்பட்டது - அல்லது திட்டமிடப்பட்டது - என்ன என்பதை தமிழக அரசு அறிந்துகொள்வது எப்படி?

முதல் இன்ஸ்டால்மென்ட் நாகப்பா; இரண்டாவது இன்ஸ்டால்மென்ட் கோவிந்தராஜ் என்கிற நிலையில், மூன்றாவது இன்ஸ்டால்மென்ட் நாகேஷ்என்பதாகி, ராஜ்குமார் விவகாரம் இன்னமும் கொஞ்சம் நீண்டால் என்ன செய்வது? மூன்றாவது தூதர் ரெடியா? யார் அது? பொட்டு அம்மானா?

ராஜ்குமார் விடுதலையாகலாம் ; ஆவார் ; ஆனால் சந்தேகங்களுக்கு விடுதலை இல்லை. அது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதும் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+