ராஜ்குமாரை மீட்பதே முதல் வேலை.. புதிய டி.ஜி.பி.
சென்னை:
வீரப்பன் பிடியிலிருந்து கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்பதுதான் எனது முதல் பணிஎன்று தமிழக புதிய டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.ராஜகோபாலன்கூறியுள்ளார்.
தமிழக டி.ஜி.பியாக இருந்த சர்மா ஓய்வு பெற்றதையடுத்து புதிய டி.ஜி.பியாகராஜகோபாலன் பதவியேற்றுள்ளார். பொறுப்பேற்றுக் கொண்ட பின்செய்தியாளர்களிடம் புதிய டி.ஜி.பி. பேசுகையில், ராஜ்குமார் விரைவல்மீட்கப்படுவார். அவரை மீட்பதுதான் எனது முக்கிய வேலை.
ராஜ்குமார் மீட்பு நடவடிக்கையில் காவல்துறையின் பிற மூத்த அதிகாரிகளுடன் கலந்துஆலோசித்து செயல்படுவேன்.
காவல் துறையில் தமிழ்நாடு போலீஸ் சிறந்து விளங்குகிறது. எனவே ராஜ்குமாரைமீட்க முடியாது என்று கூற முடியாது. விரைவில் அவர் பத்திரமாக மீட்கப்படுவார்.
காவல்துறையை நவீனப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.
தமிழக போலீஸை கடமை தவறாத, கண்ணியம் மிக்க போலீஸ் என்ற நிலைக்குக்கொண்டு வர பாடுபடுவேன் என்றார் ராஜகோபாலன்.
1965-ஆண்டு தமிழக காவல்துறையில் பணியைத் துவக்கியவர் ராஜகோபாலன்.டி.ஜி.பி. அந்தஸ்தில் இதுவரை தமிழக காவல்துறை வீட்டு வசதிக் கழகத்தின்தலைவராக 1997-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சென்னை நகர காவல்துறை ஆணையராகஇருந்தார். பிறகு சி.பி.ஐயில் சில காலம் பணியாற்றினார்.
காவல்துறைக்கு வருவதற்கு முன்பு ஐந்து ஆண்டுகள் ராணுவத்தில் சேவைபுரிந்துள்ளார். ஓய்வு பெறுவதற்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில், தமிழகடி.ஜி.பியாக உயர்ந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை டி.ஜி.பி. அலுவலகத்தில் நடந்த எளிய நிகழ்ச்சியில், தற்போதையடி.ஜி.பி. சர்மாவிடமிருந்து, ராஜகோபாலன் பொறுப்புகளைப் பெற்றுக் கொண்டார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications