வீரப்பன் விவகாரம்: மனிதஉரிமை கமிஷன் தலையிட கோரிக்கை
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளவழக்கில் தலையிட்டு தீர்வுகாணும்படி தேசிய மனித உரிமைகள் கமிஷனுக்கு 3 அரசுத்தூதர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட சிலரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச்சென்றான். இன்றுவரை ராஜ்குமார் விடுவிக்கப்படவில்லை. இதையடுத்து வீரப்பனைச்சந்திக்க நக்கீரன் கோபால் அரசுத் தூதராக காட்டுக்குள் சென்றார்.
அப்போது ராஜ்குமாரை விடுவிக்க சில கோரிக்கைகளை வீரப்பன் தெரிவித்தான்.கர்நாடக சிறைகளில் உள்ள 51 தடா கைதிகளையும், தமிழக சிறையில் உள்ள 5 தமிழ்த்தீவரவாதிகளையும் விடுவிக்கவேண்டும் என்பது வீரப்பனின் கோரிக்கையில் ஒன்று.
இதை கர்நாடக அரசும், தமிழக அரசும் ஏற்றுக் கொண்டு அதற்கான உத்தரவைப்பிறப்பித்துவிட்டன. ஆனால், தடா கைதிகள் விடுதலையை எதிர்த்து வீரப்பனைத்தேடும் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த போலீஸ்காரரின் தந்தை அப்துல் கரீம், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இவ் வழக்கால் தடா கைதிகள் விடுதலை தாமதமாவதுடன், ராஜ்குமார் விடுதலையும்தாமதமாகி வருகிறது. இது தொடர்பாக வீரப்பனைப் பலமுறை கோபால் சந்தித்துப்பேசியும் ராஜ்குமாரை விடுவிக்க வீரப்பன் மறுத்துவிட்டான்.
இதையடுத்து தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பேராசிரியர்கல்யாணி, மக்கள் சிவில் உரிமை கமிட்டி உறுப்பினர் சுகுமாரன் ஆகியோர் அரசுத்தூதர்களாகக் காட்டுக்குள் சென்று வீரப்பனைச் சந்தித்து ராஜ்குமாரை விடுவிக்கும்படிகேட்டுக் கொண்டனர். ஆனால், அப்போதும் வீரப்பன் மறுத்துவிட்டான்.
தடா கைதிகளும், தமிழ்த் தீவிரவாதிகளும் விடுதலை ஆகும் வரை ராஜ்குமாரைவிடுவிக்கமாட்டேன் என்று அவன் கூறிவிட்டான். இந் நிலையில், தடா கைதிகள்விடுதலை வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தலையிட்டுபிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணும்படி தேசிய மனித உரிமைகள் கமிஷனுக்குமூன்று தூதர்களும் கடிதம் எழுதியுள்ளனர். அந்த 9 பக்க கடிதம் விவரம்:
தடா கைதிகளின் மனித உரிமைகளை மீறும் வகையில் அந்த வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
இப் பிரச்சினையில் தேசிய மனித உரிமைகள் கமிஷன் கட்டாயம் தலையிடவேண்டும்.அப்போதுதான் இவ் விவகாரத்தில் தடா கைதிகளின் மனித உரிமைகள் எவ்வாறுமீறப்பட்டுள்ளது என்பது வெளி உலகுக்குத் தெரியவரும்.
மேலும், அப்போதுதான் வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்ட சிறப்பு அதிரடிப்படையினரால் தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் எவ்வாறு, எந்தெந்த வகையில்மனித உரிமைகள் மீறப்பட்ட என்பதை விசாரித்து வரும் தேசிய மனித உரிமைகமிஷனுக்கு அந்த விசாரணையைத் தொடர்ந்து நடத்த உத்தரவிட உச்ச நீதிமன்றத்துக்குவாய்ப்பு கிட்டும் என்று அந்த கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளனர்.
யு.என்.ஐ.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications