இஸ்ரேல் ஹெலிகாப்டர் தாக்குதலுக்கு பாலஸ்தீனம் கண்டனம்
காசா:
பாலஸ்தீனத்தில் காசா மற்றும் மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல்நடத்துவதற்குப், பாலஸ்தீன அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாலஸ்தீன அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புனித ஸ்தலமான ஜெருசலேம் யாருக்கு என்பதில் இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே மோதல் இருந்துவருகிறது. இதுதொடர்பாக சமீபத்தில் வன்முறை வெடித்தது. இஸ்ரேல் ராணுவமும், பாலஸ்தீனர்களும் மோதிவருகின்றனர்.
இதில் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். இஸ்ரேல் ராணுவம் கண்மூடித்தனமாக பாலஸ்தீன மக்கள் மீதுதாக்குதல் நடத்தி வருகிறது. ஹெலிகாப்டர் மூலம் பாலஸ்தீனர்கள் வசிக்கும் பகுதிகள், அடுக்குமாடிக் கட்டிடங்கள்,அலுவலகங்களை குறி வைத்துத் தாக்குதல் நடத்துகிறார்கள்.
இத்தாக்குதலால் குழந்தைகள் மற்றும் பெண்களின் வாழ்க்கைக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேற்குக்கரையில், அல்பரேக், ராமல்லா, பிட்டோனியா ஆகிய இடங்களிலும், காசாவில் ராபா, கான்யோனிஸ் ஆகியஇடங்களிலும் தீவிரமான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்று பாலஸ்தீன அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் குறித்து பாலஸ்தீனிய ரேடியோ செய்தியில் , திங்கள்கிழமை இரவு மேற்குக் கரையிலுள்ளநம்லஸ், ராமல்லா, ஹெப்ரான் பகுதிகளிலும், காசாவில் ராபா, கான்யூனிஸ் பகுதிகளிலும், இஸ்ரேல் ராணுவவீரர்கள் ஹெலிக்காப்டர் மூலம் தாக்குதல் நடத்தினர்.
ராமல்லாவில் நடந்த தாக்குதலில் பலர் காயமடைந்தனர். இத்தாக்குதலில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லைஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications