2003-க்குப் பிறகு ஓய்வு பெற ஸ்டீவ் வாவ் முடிவு
சிட்னி:
தென் ஆப்பிரிக்காவில் 2003-ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பைக்கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாகஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்டீவ் வாவ் தெரிவித்தார்.
சிட்னியில் தற்போது நடைபெற்று வரும் பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ள அவர்நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஆஸ்திரேலிய அணிக்காக நான் நிறைய விளையாடிவிட்டேன். ஓய்வு பெற முடிவுசெய்துவிட்டேன். 2003-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெற திட்டமிட்டுள்ளேன்.
கிரிக்கெட் விளையாடுவதை நான் இன்னும் விரும்புகிறேன் என்றாலும், அதற்கு ஒருஎல்லையுண்டு. நான் ஓய்வு பெறுவதாக முடிவு செய்துவிட்டேன். இப்போதைக்குஅடுத்த உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெற திட்டமிட்டுள்ளேன்.
ஆனால், திட்டமிட்டுள்ளேனே தவிர அது பற்றி உறுதியாகக் கூறமுடியாது. அதற்குமுன்பே ஓய்வு பெற்றாலும் பெறலாம். ஓய்வு பெறவேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு என்றார் ஸ்டீவ் வாவ்.
35 வயதான அவர் ஆஸ்திரேலியாவுக்காக 128 டெஸ்ட் மற்றும் 299 ஒருநாள்கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 8,373 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகரன்கள் எடுத்த இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை அவர்பெற்றுள்ளார். முதலிடத்தில் ஆலன் பார்டர் உள்ளார்.
1999-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்ஆஸ்திரேலிய அணிக்குத் தலைமை தாங்கி உலகக் கோப்பையை ஸ்டீவ் வென்றுதந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications