மனைவிக்கு ஜெயசூர்யா கொடுத்த பிறந்த நாள் பரிசு
துபாய்:
மனைவியின் பிறந்தநாளுக்கு இதை விட பெரிய பரிசை இலங்கை கிரிக்கெட் அணிகேப்டன் ஜெயசூர்யா அளிக்க முடியுமா என்பது சந்தேகமே.
அந்த அளவுக்கு ஷார்ஜாவில் நடைபெற்ற கோக-கோலா கோப்பைக்கானஇந்தியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. அந்தஆட்டத்தில் அவர் 189 ரன்கள் எடுத்தார்.
ஷார்ஜா போட்டிக்கு தனது மனைவி சான்ட்ராவையும் ஜெயசூர்யா அழைத்துவந்திருந்தார். இறுதி ஆட்டம் நடைபெற்ற கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றுதான்சான்ட்ராவின் பிறந்தநாள்.
இறுதி ஆட்டத்தைக் காண மைதானத்துக்கு சான்ட்ரா வந்திருந்தார். தனது பிறந்தநாளுக்கு கணவர் என்ன பரிசு தரப்போகிறார் என்று யோசித்துக் கொண்டிருந்தார்அவர்.
ஆனால், இந்திய பந்து வீச்சாளர்களை சின்னாபின்னப்படுத்தி உலக சாதனையைநெருங்கி 189 ரன்கள் எடுத்து அதை தனது மனைவிக்கு பிறந்த நாள் பரிசாகசமர்ப்பித்ததை சொல்லாமல் சொல்லிவிட்டார் ஜெயசூர்யா.
சான்ட்ராவும், அந்த பிறந்த நாள் பரிசை மனமுவந்து ஏற்றுக் கொண்டார். ஆமாம்,இதுதான் எனக்குக் கிடைத்த பிறந்த நாள் பரிசுகளிலேயே மிகச் சிறந்தது என்று அவர்கூறியுள்ளார்.
ஜெயசூர்யாவும், சான்ட்ராவும் முதல்முதலாக சந்தித்ததிலிருந்தே இருவரும் ஒருவரைஒருவர் காதலிக்கத் தொடங்கிவிட்டனர். நான் ஒரு கிரிக்கெட் ரசிகை. ஜெயசூர்யாவைமுதன்முதலாக சந்தித்ததிலிருந்து அவரை நான் விரும்ப ஆரம்பித்துவிட்டேன் என்றார்சான்ட்ரா.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications