கார், ரூ. 50,000 பணத்துடன் தப்பிய திருடர்கள்
சென்னை:
சென்னையில் தொழிலதிபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் ரூ. 50 ஆயிரத்தை திருடிக் கொண்டு புறப்பட்டபோது காவல்காரர் பார்த்து விடவே,அவரை கத்தியால் குத்தி விட்டு தொழிலதிபரின் ஆடம்பர கார் ஒன்றையும் கிளப்பிக் கொண்டு போய் விட்டனர்.
சென்னை திருவான்மியூர் வால்மீகி நகரில் வசிப்பவர் சிவக்குமார் (56). இவர் தண்ணீர் குழாய்கள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார்.
இவரது மனைவி ஒரு விபத்தில் சிக்கி அடையாறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அம்மாவை பார்ப்பதற்காகஅமெரிக்காவில் இருக்கும் மகன் பரத் சென்னை வந்தார். புதன் கிழமை அவர் அமெரிக்கா திரும்புகிறார்.
திங்கள் இரவு வீட்டில் சிவக்குமாரும், அவரது மகன் பரத்தும் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலையில் மர்ம ஆசாமிகள் சிலர் வீட்டுக்குள்புகுந்தனர்.பீரோவில் இருந்த 50 ஆயிரம் பணம், 100 அமெரிக்க டாலர், ஒரு செல்லுலார் போன் ஆகியவற்றைத் திருடிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேவந்தனர்.
அப்போது வாட்ச்மேன் சிங்காரம் விழித்துக் கொண்டார். திருடர்களை பார்த்ததும் திடுக்கிட்டுக் கத்த ஆரம்பித்தார். உடனே அவரது வாயில் கத்தியால்குத்தி மேற்கொண்டு சத்தம் போட முடியாமல் செய்து விட்ட கொள்ளையர்கள், வீட்டு முன்பு நின்றிருந்த ஆடம்பரக் காரையும் கிளப்பிக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications