போட்டோகிராபரைத் தாக்கினார் ஜடேஜா
ஜம்மு:
மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சிபிஐயால் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள அஜய்ஜடேஜா, தன்னை புகைப்படம் எடுக்க முயன்ற, பத்திரிகை போட்டோகிராபரைத்தாக்கினார்.
மேட்ச் பிக்ஸிங் குறித்து விசாரணை நடத்திய சிபிஐ தனது விசாரணை அறிக்கையில்அஜய் ஜடேஜா உள்பட 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது மேட்ச் பிக்ஸிங்குற்றச்சாட்டை நிரூபித்துள்ளது.
இந் நிலையில், அஜய் ஜடேஜா ஹரியானா அணி சார்பில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட்போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக விளையாடி வருகிறார். ஜம்முவில்உள்ள மவுலானா ஆசாத் நினைவு மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்று வருகிறது.
சிபிஐ அறிக்கை வெளியிடப்பட்டதை அடுத்து அவரிடம் கருத்து கேட்பதற்காக ஜம்முநிருபர்களும், போட்டோகிராபர்களும் சென்றனர். அப்போது சிபிஐ அறிக்கை குறித்துகருத்து தெரிவிக்க ஜடேஜா மறுத்துவிட்டார்.
மேட்ச் பிக்ஸிங் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அப்பாவி, சட்டம் தன்கடமையைச் செய்யும் என்றார் ஜடேஜா.
அப்போது அவரை படம் பிடிக்க போட்டோகிராபர்கள் முயன்றனர். இதனால்,ஆத்திரம் அடைந்த ஜடேஜா, ஒரு போட்டோகிராபரைத் தாக்கினார்.
இதனால் சிறிது நேரம் அங்கு பதற்றம் நிலவியது. பின்னர் போலீஸார் அந்தஇடத்திலிருந்து அஜய் ஜடேஜா அழைத்துச் செல்லப்பட்டார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications