ஜிதேந்திர பிரசாத் குறித்துக் கவலையில்லை .. கூறுகிறார் சோனியா
பெங்களூர்:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்குத் தன்னை எதிர்த்து ஜிதேந்திர பிரசாத் போட்டியிடுவது குறித்து எவ்வித கவலையும் இல்லை என்றுபெங்களூரில் புதன்கிழமை சோனியாகாந்தி தெரிவித்தார்.
டெல்லியிலிருந்து லட்சத் தீவு செல்லும் வழியில் பெங்களூர் விமானநிலையத்தில் சோனியாகாந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் போட்டிக்கு ஜிதேந்திர பிரசாத் போட்டியிடுவதால் எனக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. காங்கிரஸ் முதல்வர்கள்ஆட்சி புரியும் அனைத்து மாநிலங்களிலும் நல்லாட்சி நடைபெறுகிறது. பாரதிய ஜனதாக் கட்சி முதல்வர்களை விட, காங்கிரஸ் கட்சி முதல்வர்கள் மிகவும்திருப்திகரமாக ஆட்சி நடத்துகின்றனர் என்றார்.
புதிய மாநிலம் சட்டீஸ்கரில் அஜித் ஜோகி முதல்வராக நியமிக்கப்பட்டது குறித்து அவர் எதுவும் கருத்துக் கூறவில்லை.
முன்னதாக, பெங்களூர் விமானநிலையத்தில் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்சி.கே.ஜாபர் ஷெரீப் ஆகியோர் சோனியா காந்தியை வரவேற்றனர்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் போட்டி நவம்பர் 12 ம் தேதி நடக்கிறது. இதற்காக மனுத்தாக்கல் கடந்த அக்டோபர் 29 ம் தேதி நடந்தது.ஜிதேந்திர பிரசாத், சோனியா காந்தியை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளார். வேட்மனுவை வாபஸ் பெறும் நாள் நவம்பர் 4 ம் தேதியாகும்.
இந்தியாவில் நேரு குடும்பத்தை எதிர்த்து, காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு ஒருவர் போட்டியிடுவது இதுவே முதல்முறையாகும்.
யு.என்.ஐ.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications