கள்ளச் சாராயம் ..64,000 பெண்கள் கைது
சென்னை:
தமிழ்நாட்டில் இவ்வாண்டில் கள்ளச் சாராயம் காய்ச்சியதாக 64 ஆயிரம் பெண்கள்உட்பட 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக அரசுதெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை வருமாறு:
தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் கள்ளச் சாராய ஒழிப்பு தொடர்பாக 24,484வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 22,243 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு இதுவரை 2 லட்சத்து 97,120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 லட்சத்து74, 423 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.அவர்களில் 64,003 பேர் பெண்கள்.
இவர்களிடம் இருந்து 35 லட்சத்து 18 ஆயிரத்து 46 லிட்டர் சாராயம், 1 லட்சத்து 81ஆயிரத்து 710 சாராய பாக்கெட்டுகள், 5 லட்சத்து 77ஆயிரத்து 831 லிட்டர் எரிசாராயம், 2 லட்சத்து 80 ஆயிரத்து 619 லிட்டர்கள், 2 லடசத்து 42 ஆயிரம் போலி மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.
இவற்றைக் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 4,059 வாகனங்களும் பறிமுதல்செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் மூலம் 12 கோடியே 5 லட்சம் ரூபாய் அபராதமாக அரசுக்குக்கிடைத்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கள்ளச் சாராய ஒழிப்புப் பணிதீவிரப்படுத்தப்பட்டு பல மதுவிலக்கு கரும்புள்ளி கிராமங்களில் வருவாய்த்துறைமற்றும் காவல்துறையினரின் ஒருங்கிணைந்த மறுவாழ்வுத் திட்டங்களினால் நல்லமாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தை கள்ளச் சாராயம் இல்லாத மாவட்டமாக மாற்ற எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலன் அளித்து வருகின்றன. அதே போல திருவண்ணாமலை,கரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களையும் மாற்ற மதுவிலக்கு அமல் குழுக்கள்அமைக்கப்பட்டுள்ளன என்று அரசு தெரிவித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications