உலக வர்த்தகக் கழக ஒப்பந்தத்தை ஏற்கவேண்டாம் .. விவசாயிகள்
பா.ஜ.க.வும் ஒரு காங்கிரஸே!
உத்திரப் பிரதேசத்தில் கல்யாண் சிங் விலகலுக்குப் பிறகு, ராம் நரேஷ் குப்தா என்பவர், பா.ஜ.க. மேலிடத்தினால் முதல்வராக அமர்த்தப்பட்டார். இந்தராம் நரேஷ் குப்தா, நியாயமாகப் பார்த்தால் ராஜாராம்,
எஸ். டி.எஸ்., போன்றவர்கள் ஆரம்பித்திருக்கும் மூதறிஞர்கள் கட்சியில் இடம் பெறக் கூடிய அளவுக்கு வயதுத் தகுதி உடையவர்.
ஓய்வு பெற்று கவர்னராகப் போக வேண்டிய நேரத்தில் முதல்வரானார். நிர்வாகத்தை கவனிக்கவும் முடியவில்லை: அதிகாரம் செலுத்தவும்தெரியவில்லை; மற்ற கட்சிகளிலிருந்து ஆட்களை இழுக்கும் சாமர்த்தியமும் இல்லை.
உட்கட்சி எதிர்ப்பு பலம் பெறத் தொடங்கியுவுடன், மேலிடம் மீண்டும் குறுக்கிட்டது. காங்கிரஸ் கட்சி பாணியில் அடுத்த முதல்வரையும் மேலிடமேநியமித்திருக்கிறது.
இப்பொழுது வந்திருப்பவர் ராஜ் நாத் சிங். இன்றைய அரசியல் அளவுகோலின்படி சாமர்த்தியசாலி. அதாவது மற்ற கட்சிகளிலிருந்து ஆட்களை இழுத்து விடக்கூடியவர் என்று பெயர் பெற்றிருப்பவர்.
இப்பொழுது பா.ஜ.க. அரசுக்கு உத்திரப் பிரதேசத்தில் இந்தத் திறமை அதிகமாகத் தேவைப்படுகிறது. ஏனென்றால் உத்திரப் பிரதேசத்திலிருந்து,உத்திராஞ்சல் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட பிறகு, பா.ஜ.க. கூட்டணியின் மெஜாரிட்டி பலம் மிகவும் குறுகிவிட்டது. எதிர்க்கட்சியைவிட, இரண்டேஅங்கத்தினர்கள்தான். ஆளும் கூட்டணிக்கு கூடுதலாக இருக்கிறார்கள்.
ஆகையால் ஆட்கள் தேவை. இதற்கு ராஜ்நாத் சிங் முதல்வராக இருப்பது மிகவும் உதவும் என்பது பா.ஜ.க. மேலிடத்தின் கொள்கை ரீதியான முடிவு.
உத்திரப் பிரதேசத்தில் இப்படி என்றால், கோவாவில் தங்களால் ஆதரிக்கப்பட்ட முத்லவரை கவிழ்த்து விட்டு, பா.ஜ.க. தானே அரசைக் கைப்பற்றிவிட்டது.
காங்கிரசிலிருந்து உடைந்த பிரிவின் ஆதரவுடன், ஆட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. ஆக, ஆட்சி அமைப்பதிலும் சரி, ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்வதிலும் சரி, பா.ஜ.க. தர்ம நியாயங்களையெல்லாம் மூட்டை கட்டி ஓர் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டது.
இதனால் இன்று நாட்டில் அகில இந்திய அளவில் இரண்டு காங்கிரஸ் கட்சிகள் இருக்கின்றன. ஒன்று - சோனியாவின் தலைமையில் இயங்குகிறது.இன்னொன்று - பங்காரு லஷ்மண் தலைமையில் இயங்குகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications