உலக வர்த்தகக் கழக ஒப்பந்தத்தை ஏற்கவேண்டாம் .. விவசாயிகள்
சமாதானம் உருவாகுமா?
இஸ்ரேலுக்கும் - பாலஸ்தீனர்களுக்கும் இடையே ஒரு நிரந்தரமான சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பு சமீப காலமாக,தோன்றி வந்தது. ஆனால் சில நிகழ்சிகளினால், அமெரிக்காவின் ஆட்சியுடன் நடக்கிற இந்த சமாதான முயற்சிகள் பெரும் சோதனைக்குள்ளாகிஇருக்கின்றன.
சமாதான முயற்சிகள் வெற்றி பெறாததற்கு முக்கிய காரணம், ஜெருசலேம் பற்றிய பிரச்னை. கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், யூதர்கள் - ஆகிய மூன்றுமதத்தினருக்குமே ஜெருசலேம் வெவ்வேறு காரணங்களினால் ஒரு புண்ணியஸ்த்தலமாக இருக்கிறது. அது யாருடைய ஆளுகையின் கீழ் வருவது என்பதில் பெரியசிக்கல்.
இதை விட்டுக் கொடுக்க, இஸ்ரேலும் தயாராக இல்லை. பாலஸ்தீனியர்களும் தயாராக இல்லை. இவர்களுக்கிடையில் இருதரப்பும் கொஞ்சம்,கொஞ்சம் விட்டுக் கொடுத்து, ஒரு சமாதான ஏற்பாட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்த, கிட்டத்தட்ட அப்படி ஒருநிலைமை தோன்றலாம் என்ற சூழ்நிலை உருவாகியது.
ஆனால், இஸ்ரேலின் எதிர்க் கட்சித் தலைவர்களில் முக்கியமானவராகிய ஷாரூண், ஜெருசலேத்தில் உள்ள ஒரு புனித இடத்திற்குச் சென்றபோது பிரச்னைமூண்டது. பாலஸ்தீனியர்ளோடு சமாதானமே கூடாது என்றும், ஜெருசலேத்தில் காலடி வைக்க அவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் கூறி வருகிறஇவர், அந்த இடத்திற்குப் போவதை இஸ்ரேலிய அரசு தவிர்த்திருக்க வேண்டும் என்ற அபிப்ராயம் பலராலும் கூறப்படுகிறது.
அவர் அங்கு சென்றார்; பிரச்னை தோன்றியது. பாலஸ்தீனியர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். கூட்டங்கள் கல்லெறிந்தன. இப்படி கல்லெறிந்த கூட்டங்கள் மீதுஇஸ்ரேலிய ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். பலர் உயிரிழந்தார்கள். பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இரு தரப்பினரும், ஒருவரையொருவர்தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இடையில் போர் நிறுத்தம் பற்றி முடிவெடுக்கப்பட்டது. ஆனால், நடைமுறையில் இதனால் ஒரு நல்ல பயனும் விளைய வில்லை. இப்போது பிரச்னைஆரம்பித்ததற்குக் காரணம் யார் என்பதைக் கண்டறிய, ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாக ஒரு விசாரணை நடக்க வேண்டும் என்று பாலஸ்தீனியர்கள்வற்புறுத்தினார்கள்.
ஆனால் இஸ்ரேல், இதற்கு உடன்பட மறுத்து விட்டது. இறுதியில் ஐகிகய நாடுகள் சபையின் பொதுக் காரியதரிசியுடன் கலந்தாலோசித்து, அமெரிக்கா ஒருவிசாரணைக்கு ஏற்பாடு செய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் இஸ்ரேலிய அரசியலில் சிக்கல் தோன்றியிருக்கிறது. இன்றைய பிரதமர் பாரக், இவர் கொஞ்சம் மிதவாதியாகச் செயல்பட்டுவருகிறார். இவரை எதிர்க்கிற ஷாரூண், பாலஸ்தீனியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதைக் கூட விரும்பாதவர்.
இப்போது பாலஸ்தீனியர்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளதால், அவருடைய செல்வாக்கு ஓங்கக் கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. ஆகையால் பாரக்,ஷாரூணையும் சேர்த்துக் கொண்டு ஓர் அரசை நடத்த விரும்பி, தேசிய அரசு என்பது பற்றி பேசத் தொடங்கியிருக்கிறார்.
அப்படி ஒன்று உருவானால், அதன் பிறகு சமாதான முயற்சியில் இஸ்ரேல் முழு ஒத்துழைப்பைக் காட்டாது என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம். ஆகையால்இப்ப்டி ஒரு நிலை இஸ்ரேலில் தோன்றி விடுவதற்கு முன்பாகவே, ஒரு சமாதானம் ஏற்பட்டால்தான் உண்டு. பாலஸ்தீனியர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications