திரைக்கு பின்னால் "ஒளிந்திருந்த சாராய தொழிற்சாலை
கோவை:
கோவை அருகே கேரள எல்லையில் சினிமா தியேட்டரில் செயல்பட்டு வந்த கள்ளச்சாராயத் தொழிற்சாலை ஒன்றைப் போலீசார் கண்டுபிடித்தனர். இங்கு பல லட்சம்மதிப்புள்ள மதுபாட்டில்களும், எரிசாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை அருகே கேரளாவிற்கும் தமிழகத்திற்கும் இடையே எல்லைப் பகுதியாகவாளையார் உள்ளது. இங்கு போலி மதுவகைகள் தயார் செய்யப்பட்டு விற்பனைசெய்யப்பட்டு வருவதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார்இங்கு சோதனையிட்டனர்.
அப்போது தென்னந்தோப்பிற்குள் செயல்பட்டு வந்த சினிமா தியேட்டரைப் போலீசார்கண்டறிந்தனர். அப்போது அங்கு திரைக்குப் பின்னால் பல திரைமறைவு வேலைகள்நடந்திருப்பதை அறிந்தனர்.
சினிமாத் தியேட்டரின் திரைக்குப் பின்னால் பல பேரல்கள் எரிசாராயம் பதுக்கிவைக்கப்பட்டிருந்தை கண்டனர். மேலும், இவற்றை அடைத்து எடுத்துச் செல்ல போலிமதுபாட்டில்கள் இருந்ததையும் கைப்பற்றினர்.
இதில் 500 லிட்டர் எரிசாராயம், 6 பெட்டிகள் நிறைய பிராந்திப் பாட்டில்கள், 250 லிட்டர்கொள்ளவு உள்ள 23 பெரிய பீப்பாய்கள் பிடிபட்டன.
அங்கு நின்றிருந்த லாரி ஒன்றையும் போலீசார் சோதனையிட்டனர். இந்த டேங்க்கர்லாரியின் பகுதி பிரிக்கப்பட்டு, கள்ளச்சாராயம் கடத்த வசதியாக அறை இருந்தது.
மேலும், இந்த லாரியில் எரிசாராயம் கொண்டு வரப்பட்டு மோட்டாரை உபயோகித்துபீப்பாய்களில் நிரப்ப வசதி உள்ளதும் தெரிய வந்தது. இந்தப் பொருட்கள் அனைத்தையும்கைப்பற்றி, சினிமா தியேட்டருக்குப் போலீசார் சீல் வைத்தனர்.
சினிமா தியேட்டர் உரிமையாளர் வேலுச்சாமி, இங்கு இந்த தொழிற்சாலையை பலஆண்டுகளாக நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக-கேரள எல்லையான வாளையார் பகுதி கேரளாவிற்கு சாராயம் கடத்த வசதியாகப்பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் மது வகைகள் கேரளாவில் உள்ளபாலக்காட்டில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications