அஜய் சர்மாவிடமிருந்து பணம் பெறவில்லை .. பிட்ச் தயாரிப்பாளர்
டெல்லி:
டெல்லியில், 1996-ம் ஆண்டு நடந்த இந்தியா, ஆஸ்திரேலியா டெஸ்ட்போட்டியின்போது, கிரிக்கெட் ஆடுகளத்தை (பிட்ச்) சாதகமாக தயாரிப்பதற்காகபணம் வாங்கவில்லை என்று டெல்லியைச் சேர்ந்த கிரவுன்ட்ஸ் மேன் ராம் அதார்செளத்ரி கூறியுள்ளார்.
கிரிக்கெட் வீரர்களின் மேட்ச் பிக்ஸிங் குறித்த புகார்களை விசாரித்த சி.பி.ஐ.அறிக்கையில் தவறு செய்தவர்கள் பட்டியலிடப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவர்ராம் அதார் செளத்ரி. பிட்ச் தயாரிப்பதற்காக இவர், ரஞ்சி வீரர் அஜய் சர்மாவிடமிருந்துரூ. 5000 லஞ்சம் பெற்றார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தன் மீதான புகாரை செளத்ரி தற்போது மறுத்துள்ளார். செளத்ரி கூறுகையில், தனதுஅணிக்குச் சாதகமாக பிட்ச் போடுமாறு எந்த வீரரும் என்னை அணுகவில்லை.பணமும் கொடுக்கவில்லை.
சி.பி.ஐ. அதிகாரிகள் என்னை அவர்களது தலைமை அலுவலகத்திற்கு அழைத்துவிசாரணை நடத்தினர். இந்த புகார் குறித்து விசாரித்தனர். இதே கருத்தைத்தான்அர்களிடமும் நான் கூறினேன்.
பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில்,சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக பிட்ச் போடுமாறு அஜய் சர்மா கேட்டுக்கொண்டதாக கூறப்பட்டுள்ள புகாரில் உண்மையில்லை என்றார் அவர்.
பிளாஷ்பேக் .....: இந்தியாவுடனான டெல்லி டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாடாஸ் வென்று முதலில் பேட் செய்தது. முதலில் ஆடி 182 ரன்களில் ஆட்டமிழந்தது.இந்திய சுழற்பந்துவீச்சாளர் கும்ப்ளே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்னொருசுழற்பந்துவீச்சாளர் ஆஷிஷ் கபூர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தனது முதல் இன்னிங்ஸில் இந்தியா, 361 ரன்களை எடுத்தது. மோங்கியா 152 ரன்கள்எடுத்தார். கங்குலி 66 ரன்கள் எடுத்தார். மோங்கியா மேன் ஆப் தி மேட்சாக தேர்வுசெய்யப்பட்டார்.
இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 234 ரன்கள் எடுத்தது. இப்போதும்கும்ப்ளேவுக்கே அதிக விக்கெட்டுகள் கிடைத்தன. 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.பின்னர் வெற்றி இலக்கை இந்தியா எளிதில் எட்டியது. 7 விக்கெட் வித்தியாசத்தில்ஆஸ்திரேலியாவை வென்றது இந்தியா.
செளத்ரி தொடர்ந்து கூறுகையில், எனக்கு அஜய் சர்மாவைத் தெரியும். ஆனாலும்அவரிடமிருந்து பிட்சுக்காக நான் பணம் ஏதும் வாங்கவில்லை. யாரும் எனக்குஅறிவுரையும் தரவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக நான் பிட்ச் தயாரிப்பாளனாகஇருந்து வருகிறேன் என்றார் செளத்ரி.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications