மக்களை சந்திக்க கருணாநிதிக்குப் பயம் .. சொல்கிறார் ஜெ.
சென்னை:
புது டி.ஜி.பி. வீரப்பனைப் பிடிப்பேன் என சவால் விட்டுள்ளார்.அவர் எப்போதுவாங்கிக் கட்டிக் கொள்ளப்போகிறாரோ என கிண்டாக கேட்டுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து வரும் ஜெயலலிதா பரமககுடியில்நடந்த விழாவில் பேசியதாவது:
நான் சொத்து சேர்த்ததாக கருணாநிதி குற்றம் சுமத்தி வருகிறார். நான் கூறியது போல்நான் என் சொத்துக் கணக்கைக் காட்டுகிறேன். கருணாநிதி தனது சொத்துக்கணக்கையும், ஸ்டாலின் சொத்துக் கணக்கையும் காட்டத் தயாராக இருககிறாரா?
ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என கருணாநிதி நினைக்கிறார். மக்களை சந்திக்கபயந்து நீதிமன்றத்தை நாடியிருக்கிறார், என்னை பழி வாங்க எத்தனை சதி செய்தாலுமஅதை தகர்க்கும் திறமை எங்களுக்கு இருக்கிறது.
சேலம் உருக்காலையை தனியாருக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்த போதுமத்திய அமைச்சராக இருக்கும் மாறனும், டி.ஆர்.பாலுவும் இதை எதிர்க்கவில்லை.இதை வலியுறுத்தி அவர்கள் இருவரும் ராஜினாமா செய்யத் தயாரா?
கருணாநிதிக்கு அவரது குடும்பச் சண்டையை தீர்ப்பதற்கே நேரம் இல்லை. அவர்மக்கள் பிரச்னையை தீர்ப்பது எப்படி முடியும்?
பலரும் தி.மு.க.வை வெறுத்து அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர்.
கொடியவன் வீரப்பன் 500 கோடி ரூபாய் அளவிலான காட்டு சொத்துக்களைகொள்ளையடித்துள்ளான். 150 பேருடன் இருந்த அவனது பலத்தை 5 பேராக எனதுஆட்சியின் போது குறைத்தோம். இப்போது அவனிடம் கோடி கோடியாக பணம்இருக்கிறது. இவை எல்லாம் எப்படி கிடைத்தது.
வீரப்பனைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிவிட்டு இதற்கு முன் இருந்தடி.ஜி.பி. கூறி விட்டுச் சென்றுவிட்டார். புதிய டி.ஜி.பி. வீரப்பனைப் பிடிப்பேன் எனசவால் விடுத்துள்ளார். இவர் என்று வாங்கிக் கட்டிக் கொள்ளப் போகிறாரோ?
தி.மு.க. ஆட்சியில் பயங்கரவாதமும், தீவிரவாதமும் அதிகமாக உள்ளது. இந்தஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இனி வரப் போவது அ.தி.மு,க.ஆட்சிதான். அதற்காக நாம் உழைக்க வேண்டும் என்றார் அவர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications