ஆற்று வெள்ளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு

Subscribe to Oneindia Tamil

ஊட்டி:

குன்னூரில் காட்டாற்றில் மூழ்கி இரண்டு மாணவர்கள் இறந்தனர்.

குன்னூர் மவுன்ட்பிளாசா சற்குரு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் , லோகநாதன் (14). மகேந்திரன்(14), அபுதாஹீர் (14), செந்தில்குமார் (15), சுரேந்திரகுமார் (14) ஆகியோர். இவர்கள் 10ம் வகுப்பு படித்துவருகின்றனர்.

விடுமுறை நாளான சனியன்று ஒன்று சேர்ந்தனர். பிக்னிக் செல்ல முடிவு செய்தனர். பள்ளி விடுமுறையாகஇருந்தாலும், வீட்டில் உள்ளவர்களிடம் ஹாக்கிப் போட்டிக்குத் தயார் செய்யப் போவதாகக் கூறி விட்டுபுறப்பட்டனர். சுரேஷ்குமார் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார்.

நண்பர்கள் அனைவரும் டென்ஹில் என்ற இடத்திற்குச் சென்றனர். பின்னர் அங்கிருந்து காட்டாற்றிற்கு அடுத்தபக்கம் உள்ள கருப்பராயன் கோயிலுக்குச் செல்ல தீர்மானித்தனர். எனவே ஆற்றைக் கடக்க முதலில் லோகநாதன்இறங்கியுள்ளார். அப்போது காட்டாற்றில் மழை காரணமாக தண்ணீர் அதிகமாகவே வந்து கொண்டிருந்தது.

ஆற்றுக்குள் இறங்கிய லோகநாதன், கால் இடறி தண்ணீரில் விழுந்தார். இதையடுத்து அவரைக் காப்பாற்றமகேந்திரனும் தண்ணீருக்குள் இறங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் அருகில் இருந்த நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டனர்.

இவர்களைக் காப்பற்ற முடியாமல் மற்ற மாணவர்கள் கூச்சலிட்டனர்.

இதனைக் கேட்ட அருகில் இருந்த பலர் திரண்டு வந்தனர். நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்ட இவர்களை மீட்கமுயற்சித்தனர். ஆனால் இருவரையும் உயிருடன் மீட்க இயலாமல், உடலை மட்டுமே மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+