ராஜ்குமார் - 100: "தமிழகமே கதி
டெல்லி:
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமார் மீட்பு விஷயத்தில் கர்நாடகம், முழுக்க, முழுக்கதமிழகத்தையே சார்ந்திருக்கிறது என்று கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா திங்கள்கிழமை தெரிவித்தார்.
டெல்லியில் அவர் நிருபர்களிடம் இதுகுறித்துக் கூறியதாவது:
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு 100 நாட்களாகி விட்டன. இந்த விஷயத்தில் இரு மாநில அரசுகளும் சேர்ந்துசெயல்படுகின்றன. ராஜ்குமார் மீட்பு விஷயத்தில் கர்நாடகத்துடன், தமிழகம் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறது.
இரு மாநிலங்களிலும் சட்டம்-ஒழுங்கு நிலை சீர்கெடதாவாறு அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ராஜ்குமாரை எவ்வித ஆபத்துமின்றி மீட்பதே கர்நாடக அரசின் முக்கியக் குறிக்கோளாகும். ராஜ்குமாரின்குடும்பத்தார் பேச்சுவார்த்தை மூலம் வீரப்பனின் மனதை மாற்றி, ராஜ்குமாரை மீட்டு வருவதையேவிரும்புகிறார்கள் என்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய கர்நாடக காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், ராஜ்குமாரைமீட்கும் விஷயத்தில் தூதர்கள் குழு எப்போது மீண்டும் காட்டுக்குச் செல்லும் என்று இன்னும் முடிவெடுக்கவில்லை.
தமிழக முதல்வர் கருணாநிதி, தூதர்கள் குழுவுடன், நடிகர் ராஜ்குமார் விவகாரம் குறித்து விவாதித்து வருகிறார்.ராஜ்குமார் மீட்பு விஷயத்தில் கர்நாடகம், தமிழகத்தையே நம்பியிருக்கிறது.
தன்னை அரசுத் தூதராக அங்கீகாரம் செய்தால்தான் அடுத்த முறை காட்டுக்குச் செல்வேன் என்று நெடுமாறன்கூறியிருப்பது பற்றி கேட்டபோது, அதுகுறித்து கர்நாடகத்திற்கு எந்தத் தகவலும் வரவில்லை என்றார்.
யு.என்.ஐ.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications