காடு செல்கிறது தூதுக் குழு
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக நக்கீரன் கோபால், பழ. நெடுமாறன்தலைமையிலான தூதுக் குழு செவ்வாய்க்கிழமை காலை காட்டுக்குச் செல்லும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத் தூதர் குழு வட்டாரத்தில் திங்கள்கிழமை இரவு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.காட்டிலிருந்து வீரப்பனின் சிக்னல் கிடைத்ததையடுத்து இக்குழுவினர் செவ்வாய்க்கிழமைகாலை காட்டுக்குப் பயணமாகின்றனர்.
குழுவில் கோபால், நெடுமாறன் தவிர பேராசிரியர் கல்யாணி, புதுவை சுகுமாறன்ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
ராஜ்குமார் கடத்தப்பட்ட பிறகு 6-வது முறையாக கோபால் காட்டுக்குச் செல்லவுள்ளார்.நெடுமாறன் குழுவினருக்கு இது இரண்டாவது பயணமாகும்.
கடந்த ஜூலை மாதம் 31- தேதி தொட்டகாஜனூர் பங்களாவிலிருந்து, வீரப்பன் கும்பலால்ராஜ்குமார் கடத்தப்பட்டார். அதன் பிறகு அவரை மீட்கும் முயற்சியில் அரசுத் தரப்பில்கோபால் களம் இறக்கப்பட்டார். எல்லாம் கணிந்து வந்த நேரத்தில், ராஜ்குமாருடன்சேர்த்துக் கடத்தப்பட்ட உதவி டைரக்டர் நாகப்பா தப்பி வந்தார்.
இதையடுத்து நெடுமாறன் தலைமையிலான மூவர் குழு, கோபாலுடன் சேர்ந்து மீட்புமுயற்சியில் இறங்கியது. இவர்கள் முயற்சிக்கு ஓரளவு பயன் இருந்தது. ராஜ்குமாரின்மருமகன் கோவிந்தராஜு மீட்கப்பட்டார்.
இந்தச் சூழ்நிலையில் ராஜ்குமார் கடத்தப்பட்டு 100 நாட்கள் ஆகியுள்ளன. அவரைவிடுவிக்க வேண்டுமானால், மைசூத் தடா கைதிகளை விடுவிக்க வேண்டும், தமிழகசிறையில் உள்ள தமிழ்த் தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று வீரப்பன்தரப்பு நிபந்தனை விதித்தது. அதற்கு சுப்ரீம் கோர்ட் தடை போட்டது. இதுதொடர்பாக ஓய்வுபெற்ற கர்நாடக டி.எஸ்.பி. அப்துல் கரீம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ளது.
செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், தூதுக்குழுவினர் அன்று காலை காட்டுக்கு வரலாம் என்று வீரப்பன் தரப்பு தகவல்அனுப்பியுள்ளது. இதையடுத்து தூதுக் குழுவினர் செவ்வாய்க்கிழமை காலை காடுசெல்கின்றனர்.
இம்முறை எப்படியும் ராஜ்குமாருடன்தான் திரும்புவோம் என்று கோபாலும்,நெடுமாறனும் ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications