ராஜ்குமாரை மீட்கத் துடிக்கும் அதிரடிப் படையினர்

Subscribe to Oneindia Tamil

அந்தியூர் காடு:

வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரை எங்களால் தான் மீட்க முடியும் எனஅதிரடிப்படையினர் கூறுகின்றனர்.

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு 100 நாட்கள் ஆகிவிட்டன. இரு மாநில அரசுகளும் தொடர்ந்துதூதுவர்களை அனுப்பியும் இன்னும் மீட்க முடியவிலலை.

அதிரடிப்படையினர் நெருக்கடி இல்லாததால் வீரப்பன் சர்வ சுதந்திரமாகச் செயல்பட்டு வருகிறான்.

முன்பு வீரப்பனைப் பிடிக்க இரு மாநில அரசுகளும் அதிரடிப்படையினரைக் குவித்தனர். கர்நாடகஅதிரடிப்படையினர் மாதேஸ்வரன் மலை, புளிஞ்சூர், திம்பம் மலைப்பகுதிகளிலும்

தமிழக அதிரடிப்படையினர் ஆசனூர், பர்கூர், தட்டக்கரை, பண்ணாரி, மேட்டூர், தட்டக்கரை, அந்தியூர், பவானிஉட்பட பல இடங்களில் தங்கி வீரப்பனைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

இப்போது ராஜ்குமாரை மீட்கும் வரையில் அதிரடிப்படையினர் எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது எனஇவர்களுக்கு வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், கோவை சிறுகையில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருந்த டி.எஸ்.பி.சிதம்பரநாதன் கடத்திச் செல்லப்பட்டார். அப்போது டி.ஜி.பியாக இருந்த தேவராம், சஞ்சாய் அரோரா ஆகியோர்காட்டை முற்றுகையிட்டு மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது வீரப்பன் போலீசாரின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல், கடத்திச் சென்றவர்களை விட்டு விட்டு ஓடிவிட்டான். இதே போல நெற்றிக்கண் ஆசிரியர் மணி மற்றும் வக்கீல் கிருஷ்ணர்த்தி ஆகியோரை வீரப்பனிடமிருந்துஅதிரடிப் படையினரே நள்ளிரவில் தாக்குதல் நடத்தி மீட்டுள்ளனர்.

எனவே அதிரடிப்படையினர் ராஜ்குமாரை மீட்க இப்போதும் தயார் எனக் கூறி வருகின்றனர். இரு மாநிலஅரசுகளும் தூதுவர்களை நம்பும் அளவிற்கு எங்களை நம்ப மறுக்கின்றனர். எங்கள் கைகள் கட்டப்பட்டு விட்டனஎன அதிரடிப்படையினர் குமுறுகின்றனர்.

அதிரடிப்படையினர் காட்டுக்குள் புகுந்தால், வீரப்பன் தனது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ராஜ்குமாரை விட்டுவிட்டுப் போக வாய்ப்பு உள்ளது எனக் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+