ஜனாதிபதி சிங்கப்பூர் பயணம்
டெல்லி:
ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் மூன்று நாட்கள் சுற்றுப் பயணமாக நவம்பர் 10 ம் தேதி முதல் 13 ம் தேதி வரை சிங்கப்பூர் செல்கிறார். கடந்த 30ஆண்டுகளில் இந்திய ஜனாதிபதி ஒருவர் சிங்கப்பூர் செல்வது இதுவே முதல்முறை.
1971 ம் ஆண்டில் ஜனாதிபதி வி.வி.கிரி, சிங்கப்பூர் சுற்றுப்பயணம் செய்தார்.
சிங்கப்பூர் செல்லும் ஜனாதிபதி, அங்குள்ள அதிபர் எஸ்.ஆர்.நாதன், பிரதமர் கோக் சாக் டோங், மூத்த அமைச்சர் லீ குவான் யூ ஆகியோரைச் சந்தித்துப்பேசுவார்.
இந்தியா-சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு இருக்கும். சிங்கப்பூர் பிரதமர் கோக் சாக் டோங் கடந்தஆறு வருடங்களில் மூன்று முறை இந்தியா வந்திருந்தார்.
அவர் தனது இந்திய சுற்றுப் பயணத்தின்போது டெல்லி, சென்னை, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய நகரங்களுக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications