ஜம்மு-காஷ்மீரில் இந்த வருடம் 2,200 பேர் பலி
ஜம்மு:
ஜம்மு - காஷ்மீரில் இந்த ஆண்டு இதுவரை 2,200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 60 சதவிகிதம் பேர் தீவிரவாதிகள் என அரசு செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இதுவரையிலான 10 மாதங்களில் ஜம்மு - காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகளின் தாக்குதல்களிலும் அவர்களை தேடும் பணியிலும் 2, 200 பேர்கொல்லப்பட்டுள்ளனர்.
இவற்றில் 60 சதவிகிதம் பேர் தீவிரவாதிகள் என அரசின் செய்தித் தொடர்பாளர் புதன் கிழமையன்று தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனவரி மாதம் முதல் 1,306 தீவிரவாதிகளும், 596 பொது மக்களும், 319 ராணுவத்தினரும் கொல்லப் பட்டுள்ளனர்.
கடந்த 7 ஆண்டுளில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கையை விட இந்த ஆண்டு கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகமாகும்.
1994-ம் ஆண்டு முதல் இதுவரை 1,600 தீவிரவாதிகள் கொல்லப் பட்டுள்ளனர்.
இந்தஆண்டு தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் ராணுவத்தினர் பெரும் வெற்றி பெற்றுள்ளனர்.
1990-ம் ஆண்டு 550 பேரும், 1991-ம் ஆண்டு 844 பேரும், 1992-ம் ஆண்டு 819 பேரும், 1993-ம் ஆண்டு 1,310 பேரும், 1995-ம் ஆண்டு1,332 பேரும், 1996-ம் ஆண்டு 1.209 பேரும், 1997-ம் ஆண்டு 1.075 பேரும், 1998-ம் ஆண்டு 999 பேரும், 1999-ம் ஆண்டு 1,082தீவிரவாதிகளும் கொல்லப் பட்டுள்ளனர்.
பொது மக்கள் தீவிரவாதிகளின் வன்முறையால் வெறுப்படைந்து தீவிரவாதிகள் பற்றி முக்கியமான தகவல்களை ராணுவத்தினருக்கு அளித்து நல்லஒத்துழைப்பு நல்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 363 பேர் அயல் நாட்டவர்கள்.
பாதுகாப்பு படையினர் அயல் நாட்டு தீவிரவாதிகளை அடக்குவதில் வெற்றி கண்டிருப்பது சமீப காலத்தில் அதிகமான அளவில் அயல்நாட்டு தீவிரவாதிகள்கொல்லப் பட்டிருப்பதிலிருந்தே தெரியவரும்.
ஆனாலும் தீவிரவாதிகள் அதிகமான அளவில் வெடி பொருள்கள் வைத்திருப்பதாக தெரிய வருவது கவலைக்குரியது.
இதுவரை பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளிடமிருந்து 662 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடி மருந்தையும், 1,300 கிலோ வெடிமருந்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
பாதுகாப்புப் படையினரும் அதிக அளவில் கொல்லப்பட்டுள்ளனர். நான்கு தீவிரவாதிகளுக்கு ஒரு வீரர் என்ற முறையில் பாதுகாப்புப் படையினர்கொல்லபட்டிருக்கிறார். இது 1:8 என்ற விகிதத்தில் 1990-களில் இருந்தது.
இந்த ஆண்டு இதுவரை 319 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப் பட்டுள்ளனர். சென்ற ஆண்டு முழுவதும் 356 வீரர்கள் கொல்லப்பட்டனர். 1994-ம்ஆண்டு 1,596 தீவிரவாதிகளும் 198 வீரர்களும் கொல்லப்பட்டனர் என்று அவர் கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications