கருணாநிதிக்கு நன்றி கூறுகிறார் ஜோதிபாசு
சென்னை:
என்னைப்பற்றி தாங்கள் எழுதியுள்ள கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகளை மதித்துப் போற்றுகிறேன் என்று மேற்கு வங்க முன்னாள் முதல்வர்ஜோதி பாசு, தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குவங்கத்தில் 24 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருந்து சரித்திரம் படைத்துள்ள மார்க்சிஸ்ட் தலைவர் ஜோதிபாசு, சமீபத்தில் ஓய்வு பெற்றார்.
அதையொட்டி முரசொலியில் முதல்வர் கருணாநிதி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் ஜோதிபாசுவின் நேர்மையைப் பாராட்டியிருந்தார்.
இதற்கு பதில் அளித்து ஜோதிபாசு எழுதியுள்ள கடிதத்தில், ஜோதி பாசு, மாற்று அணியில் இருந்தாலும் மார்க்சிஸ்ட் ஆட்சியின் நேர்மையை அவர் மனம்திறந்து பாராட்டியிருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு, ஜோதிபாசு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
தாங்கள் என்னைப்பற்றி முரசொலியில் எழுதியுள்ள கடிதத்தை மிகுந்த ஆர்வத்துடன் படித்தேன். அக்கட்டுரையில் என்னைப்பற்றி தாங்கள் வெளிப்படுத்தியுள்ளஉணர்வுகளை பெரிதும் மதிக்கிறேன்.
தங்கள் மருமகன் முரசொலி மாறனை நான் நீண்டகாலமாக அறிவேன். அவர் அண்மையில் நோய்வாய்ப்பட்டிருப்பது அறிந்து வருந்துகிறேன். அவர் விரைவில்நலம் பெற வாழ்த்துகிறேன் என்று ஜோதிபாசு குறிப்பிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications