மாஜி மனைவி வீட்டில் திருடிய போலீஸ்காரர்
சென்னை:
தன்னுடைய மாஜி மனைவி வீட்டிற்குள் புகுந்து நகை, பணத்தைத் திருடிய போலீஸ் தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சக்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் போலீஸ்காரர். இவரது மனைவி சாந்தி.இவர்களுக்குள் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக கடந்த 1994 ம் ஆண்டு முறைப்படி விவாகரத்து செய்து கொண்டனர்.
இதன்பிறகு, சாந்தி 1995 ம் ஆண்டு சந்திரன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு கச்சக்கட்டியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 3குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சாந்தியின் முதல் கணவர் ராமச்சந்திரன் திண்டுக்கல் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்றுதிண்டுக்கல்லில் இருந்து ஒரு டாடா சுமோ காரில் கச்சக்கட்டி கிராமத்திற்கு வந்தார்.
அப்போது சாந்தி, தனது 2 வது கணவருடன் வெளியூர் சென்றிருந்தார். வீடு பூட்டப் பட்டிருந்ததைக் கண்ட ராமச்சந்திரன் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளேசென்றார்.
அங்கிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 5 சவரன் நகை, ரூ 10,000 ஆகியவற்றைத் திருடிக் கொண்டு காரில் ஏறிச் சென்று விட்டார்.
இதுகுறித்து சாந்தி, வாடிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த தலைமைக் காவலர்ராமச்சந்திரனை கைது செய்தனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications