"கூட்டணியா? தேர்தல் வரட்டும் பார்க்கலாம்
சேலம்:
தேர்தல் நம்மை விட்டு எங்கும் போய் விடாது. அது வரும்போது பார்த்துக் கொள்வோம் என சேலத்தில் நடந்த தமிழ் மாநில காங்கிரஸ்வழக்கறிஞர்கள் மாநாட்டில் மூப்பனார் பேசினார்.
சேலத்தில் நடந்த முதலாவது தமிழ் மாநில காங்கிரஸ் வழக்கறிஞர்கள் பிரிவு மாநாட்டின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட தலைவர் மூப்பனார்பேசியதாவது:
சுதந்திரப் போராட்ட காலங்களில் வழக்கறிஞர்கள் முன்னின்று போராட்டத்தை வழி நடத்தினர். சமுதாயப் பணியில் வழக்கறிஞர்கள் தான் முன்னிலைவகிக்க முடியும். வழக்கறிஞர்கள் அதிகம் படித்தவர்கள். உலக நடப்புகளை அறிந்தவர்கள். சட்டம் தெரிந்தவர்கள். எனவே நல்லதொரு சமுதாயத்தைஉருவக்குவது வழக்கறிஞர்களால் முடியும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது நாம் தோல்வியடைந்தோம். நமது தோல்விக்குப் பின்னர் நம்மோடு இருந்தவர்கள் தொடர்ந்து இருப்பார்களாஎன்ற நிலை ஏற்பட்டது. அவர்கள் இப்போதும் நம்மோடு தொடர்ந்து இருக்கின்றனர் என்பதில் பெருமையாக உள்ளேன்.
தேர்தல் நம்மை விட்டு விட்டு எங்கும் போய் விடாது. அது வரும்போது பார்த்துக் கொள்ளலாம். ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவது உங்கள் கையில்உள்ளது. எதிர்காலம் நம் கையில் தான் உள்ளது. அந்த நம்பிக்கையோடு நாம் செயல்பட வேண்டும். எதிர்காலத்தில் நம்மால் முடியும் என்ற நம்பிக்கைநம்மிடம் உள்ளது என்றார்.
முன்னதாக தொடக்க விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், மாற்று ஆட்சி ஏற்படும் போதும், மாற்று அரசு அமையும்போதும் தார்மீக முறையில் செயல்படுவது தமிழ்மாநில காங்கிரஸ். தார்மீக முறை பற்றி தமிழ் மாநில காங்கிரஸ் மட்டுமே பேச முடியும். இதை விட்டுவிட்டு யாரோ ஆட்சி அமைத்து விட்டுப் போகட்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வெறுமனே சும்மா ஒதுங்கி இருக்க முடியாது.
தார்மீக சக்தியோடும், தார்மீக உணர்வோடும் மக்களை அணுகும்போது மக்களின் ஆதரவு நிச்சயம் இருக்கும். கடந்த 1996ம் ஆண்டு நிராயுதபாணியாகதேர்தல் களம் இறங்கினோம். தார்மீக சக்தியால் வென்றோம். இதனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தார்மீக சக்தி தொடர்ந்தது.
நமது ஆட்சி முறை எந்த அளவு பொது மக்களுக்குப் பயன் உள்ளதாக அமைந்துள்ளது?. எதிர்காலத்தில் இந்த ஆட்சிமுறை எப்படி இருக்க வேண்டும்.?அரசியல் சட்ட நெறிமுறைகளை மீறக் கூடியதாக இருக்கக் கூடாது. ஆட்சி வரைமுறைகளை மீறக் கூடாது. அவ்வாறு சட்டத்தை வளைக்கக் கூடிய,மீறுகின்ற ஆட்சி, ஜனநாயக ஆட்சியாக இருக்க முடியாது.
தற்போதுள்ள ஆட்சிமுறையில் 3 குறைபாடுகள் உள்ளன. மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் உள்ள உறவுகள் சரியானதாக இல்லை. மத்தியஅரசு எஜமானர் போல செயல்பட்டு வருகிறது. மாநில அரசு சிப்பந்தி போல செயல்பட்டு வருகிறது. மாநிலங்களுக்கு போதுமான நிதி ஆதாரங்கள்இருப்பதில்லை, அதிகாரம் இருப்பதில்லை.
இப்போதுள்ள மாநில அரசுகள் வரவுக்கு மீறிய செலவுகளைச் செய்து வருகிறது. திட்டங்களைக் கடன் பெற்றே நிறைவேற்றுகின்றன. தமிழ்நாட்டில்வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. ஒரு சாதாரண விவசாயி கடன் பெற்றால், அவரது வருவாய் மற்றும்சொத்துக்குட்பட்டுத் தான் அரசு கடன் கொடுக்கிறது. ஆனால், அரசு மட்டும் தனது வருவாய் அளவுக்கு மீறி கடன் பெறுவது எவ்விதத்தில்நியாயமானது.
இப்போது அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே உள்ள உறவு நிலை பற்றி இங்கு கூறுவது பொருத்தமாக இருக்கும். அமைச்சர் உருவாக்கும்கொள்கைகளுக்கும், அதை அமல்படுத்தவும் அதிகாரிகள் உதவியாக இருக்கலாம். ஆனால், அமைச்சர், அதிகாரிகள் உறவு கூட்டுக் களவானிஉறவாக மாறிவிடக் கூடாது.
நெறிமுறைகளை மீறி செயல்படுவதால் தான் தமிழகம் முன்னேற்றம் காணாமல் பின் தங்கியே உள்ளது. காமராஜர், கக்கன், போன்ற பெரும்தலைவர்கள் நெறிமுறைகளை மீறாமல் இருந்ததால் அவர்களுடைய புகழ் இன்னும் வலுவுடையதாக இருந்து வருகிறது என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications