சிங்கப்பூர் திருடன் கோவையில் கைது
கோவை:
கோவையில் பல நகைக் கடைகளில் திருடிய சிங்கப்பூரைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் நகைக் கடைகளை குறி வைத்து நூதன முறையில் திருடி வந்த கும்பலைப் போலீசார் தேடி வந்தனர்.உடுமலைப் பேட்டையில் ஒரு நகைக் கடையில் திருட முயன்ற இரண்டு பெண்களைப் போலீசார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போதுதுப்பாக்கியால் சுட்டு இரண்டு பெண்களும் மாருதி காரில் மீட்டுச் செல்லப்பட்டனர். துப்பாக்கியால் சுட்டதில் போலீஸ்காரர் காயமடைந்தார்.
திருப்பூரில் பட்டப் பகலில் நகை கடைக்கு வந்த மூன்று பெண்கள் நூதன முறையில் 60 பவுன் நகைகளைக் கொள்ளையடித்து விட்டு மாருதிக் காரில் தப்பினர்.இதே போன்று பெட்ரோல் பங்க், மளிகைக் கடை, வீட்டு உபயோகப் பொருட்கள் கடை என பல இடங்களில் இந்தக் கும்பல் தங்களது கை வரிசையைக்காட்டியுள்ளது.
இதில் கைது செய்யப்பட்டுள்ள சிங்கப்பூரைச் சேர்ந்த ராஜ்குமார், ஏற்கனவே சிங்கப்பூரில் 5 கோடி ரூபாய் அளவிற்கு கொள்ளையடித்து மாட்டிக் கொண்டார்.நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த ராஜ்குமார், மலேசியாவிற்குத் தப்பி ஓடினார். அங்கிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவிற்குள் வந்தார்.
இங்கு தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் தங்கி கடந்த நான்கு ஆண்டுகளாக தனது கை வரிசையைக் காண்பிக்கத் தொடங்கினார். உடுமலைப் பேட்டையில்தங்கியிருந்தபோது நூர்ஜஹான் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவருக்கு உடுமலைப் பகுதியில் தளி என்ற இடத்தைச் சேர்ந்தகுணசேகரன் என்பவர் உதவி செய்து கூட்டாளியாக மாறினார்.
உடுமலைப் பேட்டையிலிருந்து கோவை வந்த ராஜ்குமார், வடவள்ளி என்ற இடத்தில் உள்ள திருமுருகன் நகர் என்ற இடத்தில் தனது மனைவி நூர்ஜஹான்,தங்கை ஸ்ரீவித்யா மற்றும் குணசேகரனுடன் தங்கியிருந்தார். நாய் வியாபாரம் செய்வதாகக் கூறி அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்துள்ளார். இதனால்யாருக்கும் சந்தேகம் வரவில்லை.
இந்நிலையில், உடுமலையில் துப்பாக்கியால் போலீசாரைச் சுட்டு தப்பியதால் மாட்டிக் கொண்டார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக தகவல்தருவோருக்கு பரிசு தருவதாக எஸ்.பி அறிவித்தார். மேலும், கொள்ளையர்களைப் பிடிக்க 20 தனிப் படையை அமைத்தார்.
இதையடுத்து இவர்களை கோவை அருகே உள்ள வடவள்ளியில் போலீசார் சுற்றி வளைத்து க் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 60 பவுன் தங்க நகைகள், 3டி.வி.க்கள், உட்பட 8 லட்சம் மதிப்புள்ள பொருட்களைக் கைப்பற்றினர். இந்த பொருட்களுடன் இரண்டு தோட்டாக்கள் கொண்ட ஒரு ரிவால்வாரையும்பறிமுதல் செய்தனர். வியாபாரத்திற்காக 8 நாய்களும் இந்த வீட்டில் இருந்தன.
ஒரே மாருதிக் காரில் பல்வேறு நம்பர் பிளேட்டுகளை இவர் பயன்படுத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணைசெய்து வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications