என்ன செய்தீர்கள் ராஜ்குமாரை மீட்க?.. ஜெ. கேள்வி
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக தமிழக,கர்நாடக மாநில அரசுகள் தூதுக்குழுவைஅனுப்பியது தவிர வேறு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
டான்சி நில பேர ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை ஜெயலலிதாவிற்குவழங்கப்பட்டிருந்தது.அதை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதி மன்றதில் மனு தாக்கல்செய்திருந்தார். அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
அந்த ஜாமீனை அவர் தனி நீதிமன்றத்திலிருந்து பெற்றுக் கொள்ளுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஜாமீன் உத்தரவை பெறுவதற்காக திங்கள் கிழமைஜெயலலிதா தனி நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.
அப்போது நிருபர்கள் ராஜ்குமாரை மீட்க உங்களிடம் திட்டம் உள்ளதா எனக் கேட்டதற்குநான் ஆட்சியில் பங்கு வகிக்கவில்லை என்னைக் கேட்டால் நான் எப்படி சொல்வது?.
பழ.நெடுமாறனை காட்டுக்கு தூதராக அனுப்புவதற்கு நான் முன்னரே எதிர்ப்புதெரிவித்திருந்தேன் .அதற்கான காரணத்தையும் கூறியிருந்தேன். நெடுமாறனை காட்டுக்குஅனுப்பியது குறித்து முதல்வர் முன்னுக்குப்பின் முரணாக கருத்துக்கள் கூறிவருகிறார். அதுகுறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்.
ராஜ்குமாரை மீட்க தமிழக, கர்நாடக அரசுகள் தவறி விட்டன இரு அரசுகளும் ராஜ்குமாரைமீட்பதற்கு தூதுக்குழுவை அனுப்பியதைத் தவிர வேறு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.இந்த பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜ்குமார் கடத்தல் விஷயத்தில் முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என எந்தஅர்த்தத்தில் முதல்வர் பேசினார் என அவரிடம் தான் கேட்க வேண்டும்.
இந்த முறை நக்கீரன் கோபால் காட்டுக்கு செல்லவில்லை என கூறப்படுவது குறித்துஎனக்கு எதுவும் தெரியாது.
தென் மாவட்ட சுற்றுப்பயணம் வெற்றிகரமாக நடந்தது. மக்கள் எனக்கு பெரும் ஆதரவுஅளித்தனர் என அவர் கூறினார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications