புளோரிடா வாக்கு எண்ணிக்கை: புஷ் முந்துகிறார்
டல்ஹெளஸி (புளோரிடா):
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடந்த கை வாக்கு எண்ணிக்கையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜார்ஜ் டபிள்யூ புஷ், ஜனநாயகக் கட்சி வேட்பாளர்அல் கோரை விட 300 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னணியில் உள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் புளோரிடா மாநிலத்தில் ஜார்ஜ் புஷ்ஷூக்கும், அல்கோருக்கும் இடையே ஓட்டுக்கள் வித்தியாசம் மிகக் குறைவாகவேஇருந்தது. இதனால் 4 கவுன்டிகளில் ஓட்டுக்களை கையால் எண்ண வேண்டும் என்று அல்கோர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அமெரிக்காவின் 43வது ஜனாதிபதி யார் என்பது கேள்விக்குரியானது.
புளோரிடாவின் சில கவுன்டிகளில் ஓட்டுக்களை கையால் எண்ண மாநில தேர்தல் அலுவலகம் உத்தரவிட்டது. தற்போது கோரை விட புஷ் 300ஓட்டுக்கள் அதிகம் பெற்று இருப்பதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் புளோரிடா முழுவதும் உள்ள 67 கவுன்டிகளில் நடந்த ஓட்டு எண்ணிக்கை குறித்தஇறுதி முடிவை மாநில தேர்தல் அதிகாரி கேத்தரின் ஹாரிஸ் இன்னும் அறிவிக்கவில்லை.
இதற்கிடேயே, கைகளால் எண்ணப்படும் வாக்குகளின் விவரங்களை புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்குள் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்என்று ஹாரிஸ் தெரிவித்திருந்தார். ஆனால் வாக்கு எண்ணுவதற்கு அதிக அவகாசம் தேவைப்படும் என்று சில கவுன்டிகளைச் சேர்ந்தவர்கள் ஹாரிஸுக்குஎழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளனர். அவற்றை பரிசீலித்து வருவதாக ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
புளோரிடா மாநிலத்தில் யாருக்கு அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அவருக்கு 25 எலக்டோரல் ஓட்டுக்கள் கிடைக்கும். இதைப் பெறுபவரேஅமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி ஆவார்.
பாம் பீச் மற்றும் மியாமி டாடே கவுன்டிகளின் சில பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை கையால் எண்ணப்பட்டு வருகிறது. வொலூசியாவில் மறு வாக்குஎண்ணிக்கை முடிந்து விட்டது. இதில் கோருக்கு 98 ஓட்டுக்கள் கூடுதலாக கிடைத்துள்ளது.
வொலுசியாவில் புஷ்ஷூக்குக் கிடைத்த ஓட்டுக்கள் 2, 910, 492, அல்கோருக்குக் கிடைத்த ஓட்டுக்கள் 2, 910, 192 ஆகும்
அல்கோரின் செய்தித் தொடர்பாளர் ஜென்னி பக்காஸ் கூறுகையில், தற்போது வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு வருகின்றன. இயந்திரத்தால் எண்ணப்பட்டவாக்குகளை விட கோருக்கு கையால் எண்ணப்பட்டதில் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன என்றார்.
புஷ்ஷின் செய்தித் தொடர்பாளர் கரேன் ஹக்செஸ் கூறுகையில் வாக்குகள் மறு எண்ணிக்கையில் புஷ் தான் முன்னணியில் உள்ளார். அவர் தான் அமெரிக்காவின்அடுத்த ஜனாதிபதி. புளோரிடாவில் முதலில் வாக்குகள் எண்ணப்பட்டது. மீண்டும் கையால் வாக்குகள் எண்ணப்பட்டது. அவை புஷ்ஷூக்கு சாதகமாகவேஉள்ளது என்றார்.
கோர் கட்சியின் தேர்தல் மேலாளரும், முன்னாள் அமைச்சருமான வாரன் கிறிஸ்டோபர் கூறுகையில் கை வாக்கு எண்ணிக்கை துரிதமாக நடந்து வருகிறது.வாக்குகளை எண்ணுபவர்கள் தங்கள் பணியைச் சிறப்பாக செய்து வருகிறார்கள் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications