காயத்தின் வலி பொறுக்காத ராணுவ வீரர் தற்கொலை
அவுரங்காபாத்:
பஞ்சாப் மாநில எல்லையில் நடந்த சண்டையில் காயமடைந்த ராணுவ வீரர் வலி தாங்க முடியாமல் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
ராணுவத்தின் 17-வது மராத்தா பிரிவைச் சேர்ந்த வீரர் பிரபாகர் விதோபா ஜீவ்ராக். வயது 35. இவர் பியூலாம்பரி தாலுக்கா ஜீவ்ராக்கிராமத்தைச் சேர்ந்தவர். ஜலந்தர் அருகே நடந்த ஒரு மோதலில் இவருடைய காலில் குண்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு காலில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடமாடி வந்தார்.
இருந்தும் கால் வலி பொறுக்க முடியாமல் அவதிப்பட்டார். இதையடுத்து உதம்பூர் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து, புனேமருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்து வந்தார்.
வலி பொறுக்க முடியாமல் துடித்த அவர் மருத்துவமனையிலிருந்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் திங்கள்கிழமை வெளியேறி வீட்டுக்கு வந்தார்.பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். 95 சதவீதம் தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் செவ்வாய்க்கிழமைபரிதாபமாக இறந்தார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications