மீண்டும் புரட்சி வருமா? பிஜியில் பீதி
சுவா:
பிஜியில் புதிய புரட்சி வரும் என்ற வதந்தி பரவியதால் போலீஸ் மற்றும் ராணுவபாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் நடந்த புரட்சியால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் மகேந்திரசெளத்ரியின் ஆட்சி கலைக்கப்பட்டது சட்ட விரோதமானது என பிஜி நீதிமன்றம் தீர்ப்புவழங்கியுள்ளது. இதனால் பிஜியில் புதிய பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிஜிமுழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட செளத்ரி, மே புரட்சியில், ஜார்ஜ் ஸ்பைட்டால்நீக்கப்பட்டார். அவரும், அவரது அமைச்சர்களும் புரட்சிக்காரர்களால் கதுசெய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் சிறை வைக்கப்பட்டனர். 56 நாட்கள் கழித்துவிடுதலை செய்யப்பட்டனர். அத்ை தொடர்ந்து அங்கு இடைக்கால அமைச்சரவையும்அமைக்கப்பட்டது
இந்த புரட்சியை தொடர்ந்து நடந்த கலவரத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர். ஸ்பைட்தற்போது நாட்டுக்கு எதிராக சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு தலைநகர் சுவாவில்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், செளத்ரி ஆட்சியை நீக்கியது சட்டவிரோதமானது என்று புதன்கிழமைஉயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் பிரதமர் லைசீனியா கொராசே, ராணுவம்அமைத்துள்ள இடைக்கால அரசு முறைப்படியானது தான் என கூறியுள்ளார். இதனால்பிஜியில் புதிய பிரச்னை எழுந்துள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் ராது காமீசி மாராவை மீண்டும் பாராளுமன்றத்தைகூட்டி பிரதமரை நியமிக்கும்படி உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் மாராதற்போது நியூசிலாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர்ஞாயிற்றுக் கிழமை பிஜி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வியாழக்கிழமை செளத்ரி அளித்த பேட்டியில், மீண்டும் நான் பிரதமராவேன் எனநம்பிக்கை தெரிவித்திருந்தார்.ஆனால் பிஜியைச் சேர்ந்த சில பத்திரிகைகள்தெரிவிக்கையில், அவரது கட்சியினரே அவர் மீது நம்பிக்கையில்லாதீர்மானம்கொண்டு வருவார்கள் என தெரிவிக்கின்றன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications