தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் கெளடா
மதுரை:
தேசிய அளவிலான வலுவான 3 வது அணி அமைக்கும் முயற்சி தீவிரமடைந்துள்ளது என்று முன்னாள் பிரதமரும், மதச் சார்பற்ற ஜனதா தளத்தின்தலைவருமான தேவ கவுடா வியாழக்கிழமை தெரிவித்தார்.
தேனியில் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:
தேசிய அளவில் 3 வது அணி அமைப்பது குறித்து மேற்குவங்க முதல்வர், அசாம் முதல்வர், லாலு பிரசாத் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பரதன், மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலர் ஹர்கிஷின்சிங் சுர்ஜித் உள்ளிட்ட தலைவர்களுடன் நானும் கலந்து ஆலோசித்தேன்.
இந்தக் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. டெல்லியில் எங்கள் கட்சி சார்பில் இம்மாதம் 19 ம் தேதி மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையைஎதிர்த்து விவசாயிகள் பேரணி நடைபெறவுள்ளது.
ஜனதா தளத்திலிருந்து பிரிந்த கட்சிகள், தற்போது மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியிலிருந்து வெளியறினாலன்றி மதச்சார்பற்றஜனதா தளத்தில் இணையும் வாய்ப்பு இல்லை.
நாட்டில் தற்போது ரூ 8000 கோடி மதிப்புக்கு உணவு, தானியங்கள் கையிருப்பில் உள்ளன. இதைப் பாதுகாத்துப் பராமரிக்க போதிய உணவு வசதிஇல்லாததால் ரூ 800 கோடி மதிப்பிலான பொருள்கள் கிட்டங்கிகளிலேயே நாசமாகிவிட்டன.
இந்தியாவை வெளிநாட்டுச் சந்தையாக மாற்றி விடக் கூடாது, வெளிநாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்யக்கூடாது என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை துறைமுகத்தின் முன் இம்மாதம் 28 ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்துவதற்காக பல இடங்களில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன். இன்னும் ஒரு வருடத்திற்குள் கட்சி வலுவடையும் என்றார்தேவ கவுடா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications