மனைவியை காதலனிடம் ஒப்படைத்த புரட்சிக் கணவர்
திருநெல்வேலி:
கட்டிய மனைவியை காவல் நிலையத்தில் வைத்து காதலனிடம் ஒப்படைத்தார் கணவர்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே சிங்கிகுளம் ஊரைச் சேர்ந்தவர்ராமச்சந்திரன். இவரது மகன் கோபி (24). நெல்லையில் ஒரு ஹோட்டலில் வேலைபார்க்கிறார்.
கோபியின் வீட்டுக்கு பக்கத்தில் வசிப்பவர் மாசானம். இவரது மகள் பகவதி (19).இதனால் கோபிக்கும், பகவதிக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழ தீர்மானித்தனர். ஆனால், அவர்களது காதலுக்கு பகவதியின் பெற்றோர்பச்சைக் கொடி காட்ட மறுத்து விட்டனர்.
பகவதி எவ்வளவோ மன்றாடியும் கேட்காமல் அவளது முறை மாப்பிள்ளை இசக்கிபாண்டியனுக்கு மணமுடித்தனர். திருமணம் முடிந்து கணவர் வீட்டுக்குச் சென்ற 5-வதுநாள் "உன்னோடு வாழ மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்து விட்டு பெற்றோர்வீட்டுக்கே வந்து விட்டார் பகவதி.
பெற்றோர் புத்திமதி சொன்னதை கேட்காமல் கட்டிய தாலியை கழற்றி வீசி விட்டார்.கோபியுடன் தான் வாழ்வேன் என்று கூறி விட்டு கோபியுடன் சென்று விட்டார்.புகாரின் பேரில் போலீசார் அவர்களை பிடித்தனர்.
காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியபோது காதலனை தவிர வேறுயாருடனும் செல்லத் தயாராக இல்லை என்று கூறி விட்டார் பகவதி.
இதனால் கணவர் இசக்கிபாண்டியனை போலீசாரை அழைத்தனர்.
அவர் தாம் கட்டிய தாலியை கழற்றி விட்ட பகவதியுடன் இனிமேல் தன்னால் வாழஇயலாது. எனவே அவளை அவளது காதலனிடமே ஒப்படைத்து விடுகிறேன் என்றுசொல்லி, போலீசார் முன்னிலையில் கோபியிடம் ஒப்படைத்தார்.
ஆனாலும், சட்டப்படி இசக்கிபாண்டியனிடம் இருந்து பகவதி விவாகரத்து பெற்றாகவேண்டும் என்பதால், காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க போலீசார் மறுத்துவிட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications