விப்ரோ, இன்போசிஸ் அதிபர்களுக்கு "இசட் பிரிவு பாதுகாப்பு
பெங்களூர்:
ராஜ்குமார் கடத்தலையடுத்து, இந்திய தகவல் தொழில் நுட்பத்துறையின் முடிசூடாமன்னர்களாக விளங்கும் "விப்ரோ நிறுவன உரிமையாளர் பிரேம்ஜி மற்றும்"இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயண மூர்த்தி ஆகியோருக்கு "இசட் பிரிவுபாதுகாப்பு அளிக்க கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் தங்களது முத்திரையைப் பதித்துள்ளநிறுவனங்கள், விப்ரோவும், இன்போசிசும். பிரேம்ஜி, இந்தியாவிலேயே மிகப் பெரியபணக்காரர். இந்தியாவின் நம்பர் ஒன் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இன்போசிஸ்.
உலக அளவில் முதன்மையான பங்குச் சந்தைகளில் ஒன்றான அமெரிக்காவின்நாஸ்டாக்கில் இடம் பெற்ற இந்திய நிறுவனம் இன்போசிஸ். தற்போது இவர்கள்இருவருக்கும் உயர்பட்ச இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்க கர்நாடக அரசு முடிவுசெய்துள்ளது.
ராஜ்குமார் கடத்தலுக்குப் பிறகு இந்த முடிவை கர்நாடக மாநில அரசு எடுத்துள்ளது.புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்த முடிவை முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணா எடுத்துள்ளார்.
பிரேம்ஜியும், நாராயணமூர்த்தியும், சராசரி மனிதர்களைப் போல் எல்லாஇடங்களுக்கும் போய் வருகிறார்கள். அவர்களது இந்த எளிமைகடத்தல்காரர்களுக்கும், தாதாக்களுக்கும் சாதகமாக அமையக் கூடும் என புலனாய்வுஅதிகாரிகள் கருதுகின்றனர்.
இசட் பிரிவு பாதுகாப்பு குறித்து விப்ரோ மற்றும் இன்போசிஸ் நிறுவன அதிகாரிகள்கருத்து சொல்ல மறுத்து விட்டனர்.
பிரேம்ஜி, சில மாதங்களுக்கு முன் ஒரு கூட்டத்தில் பேசுகையில், பணத்தை மட்டுமேநான் பிரதானமாக எண்ணி எனது பங்குகளை விற்றிருந்தால் எனது பிரபலம்போயிருக்கும் என்றார்.
அவர் எண்ணம் அவ்வாறு இருக்கலாம். ஆனால் இவர்கள் இருவரில் யாராவதுஒருவர், ராஜ்குமார் போல் கடத்தப்பட்டால் பங்குச் சந்தைகளின் நிலை என்னவாகும்என போலீஸ் அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications