சவுதியில் தலை துண்டிக்கப்பட்ட 7 கேரளவாசிகள்
கோழிக்கோடு:
சவுதி அரேபியாவில் கடந்த 6 மாதங்களில் கேரளாவைச் சேர்ந்த 7 பேரின் தலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக அவர்களுக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கோழிக்கோட்டில், பிரவாசி மலையாள கவுன்சில் அமைப்பினர், பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் நேரடிநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மண்டல பாஸ்போர்ட் அலுவலர்குளோரியா குமார் கூறியதாவது:
கேரளாவைச் சேர்ந்த இளம் வாலிபர்களுக்கு சவுதி அரேபியாவுக்குச் சென்று அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும்என்ற எண்ணம் இருக்கிறது. இதனால் சவுதி அரேபியா மற்றும் கேரளாவிலேயே உள்ள மாபியா கும்பல்தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
அவர்கள், பாஸ்போர்ட் மற்றும் விசா ஆகியவற்றை எளிதில் வாங்கித் தருவதாக உறுதியளிக்கிறார்கள். இதை நம்பிஏராளமான இளைஞர்கள் ஏமாந்து போகின்றனர். அவர்கள் மிகவும் குறைவான படிப்பே படித்திருப்பதால் எளிதில்ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.
மேலும் தங்களை நம்பி, சவுதி அரோபியாவுக்குச் செல்லும் எண்ணத்துடன் வரும் வாலிபர்களை மாபியா கும்பல்அவர்கள் மூலம் போதைப் பொருட்களைக் கடத்துகிறது. இது சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்குத் தெரியாமலேயேநடக்கிறது.
வெளிநாடுகளில் இந்தியர்கள் கைது செய்யப்பட்டால், அங்குள்ள தூதரகம் இந்தியாவுக்குத் தொடர்பு கொண்டுஅவர்களது உறவினர்களுக்குத் தகவல் கொடுக்க வேண்டும்.
ஆனால் இது பெரும்பாலான சமயங்களில் முடியாமல் போகிறது. ஏனெனில் வெளிநாடுகளுக்குச் செல்லும் கேரளவாலிபர்கள் பெரும்பாலும் பொய்யான பெயர்களையும், தகவல்களையும் கொடுத்து விசா, பாஸ்போர்ட்டுகள்வாங்கி வெளிநாடுகளுக்குச் சென்று விடுகிறார்கள்.
தற்போது, போதைப் பொருட்கள் கடத்தியது தொடர்பாக 7 கேரள இளைஞர்களின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது.அவர்களில் 5 பேர் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் கோழிக்கோடு மாவட்டத்தையும்,இன்னொருவர் பாலக்காடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்.
தற்போது சவுதிஅரோபியாவில் 1.1 மில்லியன் கேரள இளைஞர்கள் இருக்கிறார்கள் என்றார் குளோரியா குமார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications