மே. இ.தீவுகள் கிரிக்கெட் பயிற்சியாளர்கள் மீது சோபர்ஸ் கடும் கோபம்
மெல்போர்ன்:
மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களுக்கு, பயிற்சிஅளிப்பதற்கான தகுதியே கிடையாது என்று புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரும், முன்னாள்கேப்டனுமான சர் கர்பீல்ட் சோபர்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பத்திரிகைகளுக்கு சோபர்ஸ் அளித்த பேட்டி:
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு புதிதாக ரோஜர் ஹார்பர், ஜெப் துஜான் ஆகியோர்பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களால் கேப்டன் பிரையன்லாராவுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை.
இந்த இரண்டு பேரும் டெஸ்ட் போட்டிகளுக்கான பயிற்சியாளர்களாக இருப்பார்கள்என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆச்சரியத்தைத் தருகிறது. டெஸ்ட் போட்டிகளில்இருவருக்கும் நல்ல அனுபவம் கிடையாது. இவர்கள் பயிற்சி அளித்து அணி தேறுமாஎன்று தெரியவில்லை.
ஹார்பரால் முறையாக பயிற்சி அளிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.ஹார்பர் போன்றவர்களால் அணிக்கு நல்ல நம்பிக்கையைத் தர முடியும் என்று கூறமுடியாது.
பயிற்சியாளர்கள் என்று ஏதோ சான்றிதழ்களை வைத்துக் கொண்டு பயிற்சியாளர்களகஇவர்கள் வந்து விட்டார்கள். எனக்கு அப்படிப்பட்ட சான்றிதழ்கள் தேவையில்லை.இப்படித்தான் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று யாரும் எனக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று கடுமையாக கூறியுள்ளார் சோபர்ஸ்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஹார்பரும், துஜான்உதவி பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் தலைமையில் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கில்தொடரை இழந்தது மே.இ. தீவுகள் அணி. தற்போது ஆஸ்திரேலியாவில்சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications